districts

தொழில் நெருக்கடியால் கோவையில் மேலும் ஒரு தொழில் முனைவோர் தற்கொலை

கோவை,பிப்.23-

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கோவையில் மேலும் ஒரு குறுந் தொழில் முனைவோர் தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது.  

தொழில் நகரான கோவையில் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று பர வலுக்கு பின் அனைத்து குறுந்தொழில் நிறுவனங்களும்  நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளன. இச்சூழலில், சமீப கால மாக காப்பர், ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை தாறுமாறாக அதிகரித்து வருவது குறுந்தொழில் முனை வோர் மத்தியில் மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஜனவரி 28 ஆம் தேதி யன்று கோவை சூலூரில் சுகுணா இன்ஜினியரிங் என்ற குறுந்தொழில் நிறுவனத்தை நடத்தி வந்த இயேசு ராஜ் என்ற தொழில் முனைவோர் அவரது தொழில் நிறுவன வளாகத் திலேயே தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அனைத்து தொழில்துறை மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை யும் வேதனையையும் ஏற்படுத்தியது.

 இந்நிலையில், பிப்.20 ஆம் தேதியன்று கோவை சர வணம்பட்டி பகுதியைச் சேர்ந்த குறுந்தொழில் முனைவோர் மயில்சாமி (63) என்பவர் ஏற்பட்ட நிதி நெருக்கடி எதிர் கொள்ள முடியாமல் தொழிலில் மிகுந்த நஷ்டத்தை சந்தித் துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்று நிதி நெருக்கடியால் தொடரும் தற்கொலை சம்பவங்கள்  தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.