districts

பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவை, நவ. 29- இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரம் அருகே அங்காடிபுரத்தைச் சேர்ந்தவர் அணில்  குமார் (43). இவர் கோவை சாய்பாபா காலனியில் தங்கி பிரேம், செல்வ ராஜ், சுரேஷ், ரவிக்குமார், ஆர்த்தி, பாபு ஆகியோருடன் சேர்ந்து வி.வி டிரே டர்ஸ் என்ற பெயரில் ஆன்லைனில் நிதி தொடர்பான தொழில் செய்து வந்தார். மேலும், அதில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு தினமும் ஒரு  ொகை மற்றும் குறிப்பிட்ட கால அவ காசத்தில் செலுத்திய பணத்தை இரட் டிப்பாக்க திரும்பத் தருவதாக அறி விப்பை வெளியிட்டார்.  அதனை நம்பி கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக் கில் பணத்தை முதலீடு செய்தனர். அவ்வாறு பணம் செலுத்தியவர்க ளுக்கு சில தினங்கள் மட்டுமே தொகையை திருப்பிக் கொடுத்து வந்தனர். அதன்பிறகு முதலீட்டாளர்க ளுக்கு கூறியபடி பணத்தை கொடுக் கவில்லை. இதனால் தாங்கள் ஏமாற் றப்பட்டதை அறிந்த முதலீட்டாளர் கள் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரேம், செல்வராஜ், சுரேஷ் ஆகிய 3 பேரை கடந்த 8 மாதங் களுக்கு முன்பு கைது செய்தனர். மேலும், தலைமறைவான அணில் குமார், ரவிக்குமார், ஆர்த்தி, பாபு ஆகி யோரை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அணில் குமாரை போலீசார் வெள்ளியன்று கேரள மாநிலத்தில் கைது செய்தனர். மேலும், ரவிக் குமார், ஆர்த்தி, பாபு ஆகிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

;