districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மீனாட்சிபுரம் வாரச்சந்தை வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

பொள்ளாச்சி, செப்.19-  மீனாட்சிபுரம் வாரச்சந்தை வழக்கம் போல் வெள்ளிக் கிழமை செயல்படும் என காய்கறி சங்கம் தெரிவித்துள்ளது.  பொள்ளாச்சியை அடுத்த தமிழக - கேரள எல்லைப் பகுதி யான மீனாட்சிபுரம் சுற்றுவட்டார பொதுமக்களின் அத்தியாவ சிய காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட  பொருட்களை விற்பனை செய்வதற்கு கர்மவீரர் காமராஜர்  வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடை பெற்று வந்தது. இந்நிலையில், சில காரணங்களால் வாரச் சந்தை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.  தற்போது  பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்களின் நலன் கருதி வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் பிரதி வெள்ளிக்கிழமை செயல் படுமென கர்ம வீரர் காமராஜர் வாரச்சந்தை சங்கத்தினர் தெரி வித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் தர்ணா

கோவை, செப். 19 –  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, உதவித் தொகை, அரசு  வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.  அப்போது, திடீரென அவர்கள் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  அப்போது, தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகை களை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  மாற்றுத்திறனாளிகளின் மனுவை கிடப்பில் போடாமல், உடனடியாக தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கோரிக்கையின் மனுக்களின் மீது உரிய தீர்வை எட்ட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாக திறன்பட  செயல்படும் மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும். பெண்கள் மற்றும் மிகவும்  நலிவுற்ற வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாற்று திறனாளி களுக்கு முன்னுரிமை அளித்து அரசு வேலை வழங்க வேண்டும். கோவை மாவட்ட மாற்றுத்திறனாளி மகளிர்கள் பயிற்சி பெற, சுயதொழில் செய்ய. விளையாட்டு பயிற்சி பெற  மற்றும் பாதுகாப்பாக தங்குவதற்கு அரசாங்க பழைய கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும். மேலும், பாரா  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவிற்கான பயிற்சி பெற  சிறப்பு திடல் அமைக்க வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளி பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும்  கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில்  சந்தித்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டு வருவதாக தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

வட்டாட்சியர் மீது புகார்

ஈரோடு, செப்.19- ஈரோடு மாவட்டம், லக்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழ.முரளிச்சந்திரன். இவர் தனது நன்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தங்களிடம் நிலம் வாங்கும் அல்லது விற்கும் நபர்களுக்கு வீட்டுமனை நிலங்களை வரன்முறை செய்து தர கொடுமுடி வட்டாட்சியரி டம் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பங்களுக்கு கடந்த 6 மாதங்களாக தீர்வு காணப்படாமல் உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனால் பலர் தங்கள் வீட்டுமனை நிலத்திற்கான அங்கீகா ரம் பெற முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி யுள்ளனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு  நேரில் சென்று முறையிட்ட போது ஒரு வார கால அவகாசம் அளித்தவர், தற்போது மருத்துவவிடுப்பில் சென்று  விட்டார் எனஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.

அரசு அலுவலகங்களில் இ-ஆபீஸ் திட்டம்

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி ஈரோடு, செப். 19- தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இ-ஆபீஸ் திட்டம் விரைவில் செயல்படுத்தப் படும் என தகவல் தொழில்நுட்பம் மற் றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் தெரி வித்துள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், மின் அலுவலகம் மற்றும்  இ-சேவை தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், தமிழக அர சின் திட்டங்கள் மக்களை சென்ற டையும் வகையில், அனைத்து அரசு சான்றிதழ்களும், சேவைகளும் மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, நடப்பு ஆண் டிற்குள், 300க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த சேவைகள் மின்னணு  முறையில் உருவாக்கப்பட்டு, இ- சேவைகள் மூலம் வழங்கப்படும். இது மின்-அலுவலகத்தின் நடைமு றையை அடிப்படையாகக் கொண் டது. அனைத்து அலுவலகங்களை யும் இ-அலுவலகங்களாக மாற்று வதன் மூலம், பணிகள் எளிதாகும். இது கோப்புகளைச் சேமிப்பதையும் கோப்புகளைக் கண்டறிவதையும் எளிதாக்குகிறது. மின்-அலுவல கம் காகிதம் இல்லாத சூழலை உரு வாக்கி அரசுக்கு பெரும் செல வைக் குறைக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களிலும் இ-ஆபீஸ் திட்டம் விரை வில் செயல்படுத்தப்படும், என்றார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி மற் றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்

கோவை, செப்.19- குப்பையை கொட்டினால் ஆயிரம் அபராதம் எனவும், அதனை போட்டோ எடுத்து கொடுத்தால் ரூ.500 சன்மானம்  என்கிற ஊராட்சி தலைவரின் அறிவிப்பு அனைவரின்  கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள காட்டம் பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த  வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கே வந்து  தூய்மைப்பணியாளர்கள் வாங்கிச்செல்கின்றனர். இப்படி யிருந்தும், பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோ ரங்களில் கொட்டிச்செல்கின்றனர். இதனை தவிர்க்கும் வகை யில் பெண் ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி பாலகிருஷ் ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் வைத்துள்ளார். குப்பை கொட்டப்படும் இடங்களில் அவர் வைத்துள்ள விளம்பர பலகையில், பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம் விதிக் கப்படும். குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக் கொடுத்தால் ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவர் கூறுகையில் முதற் கட்டமாக 4 வார்டுகளில் மட்டுமே இதுபோன்ற முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது, என்றார்.

நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப்.19 - சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த  வாரம் நடைபெற்ற ஏலத்தில்  3000 மூட்டைகள் நிலக்க டலை வந்திருந்தன. குவிண் டால் ஒன்றுக்கு, முதல் ரக  நிலக்கடலை  ரூ.7,100 முதல்  ரூ.7,300 வரையிலும், இரண் டாவது ரக நிலக்கடலை ரூ. 6,700 முதல் ரூ.7,000 வரை யிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.6,200 முதல் ரூ.6, 400 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1  கோடிக்கு ஏலம் நடைபெற் றது. 

ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்வு 

ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்வு  உடுமலை, செப். 19 - உடுமலையில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி  மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓவி யம் வரையும் நிகழ்வு நடைப்பெற்றது. உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் உடுமலை தேஜஸ்  ரோட்டரி சங்கம் இணைந்து ஓசோன் பாதுகாப்பு என்ற தலைப் பில் இந்நிகழ்வை எஸ்கேபி மேல்நிலைப் பள்ளியில் நடத்தி னர். இதில் 75 அடி நீள அளவில் மாணவர்கள் 75 நிமிடங்கள்  தொடர்ச்சியாக ஓசோன் பாதுகாப்பு புவி வெப்பமாதல் ஆகிய  தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் சக்கர பாணி தலைமையில், கேந்திரிய வித்யாலயா பள்ளி  ஆசிரியர் சதீஷ்குமார் வரவேற்றார். மாவட்ட சுற்றுலாத்துறை  அலுவலர் உமா சங்கர் துவக்கி வைத்தார். விவேகானந்தா  வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி, தமிழ்நாடு அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப மைய அறிவியல் அலுவலர் லெனின் தமிழ் கோவன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இறுதியாக பூலாங்கிணறு நாட்டு நலப்ப ணித் திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

தாராபுரம், செப். 19 - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை தாரா புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாராபுரம் அடுத்த நாரணாபுரம் பகுதியை சேர்ந்த பரம சிவன் மகன் பாலசுப்பிரமணி (23) கோழிப்பண்ணையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு  முன்பு அதே பகுதியில் வசிக்கும் உறவினரின்  வீட்டிற்கு சென் றுள்ளார். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் உறவினரின் 14  வயது சிறுமியிடம் பெற்றோர் இல்லாதபோது பாலியல் ரீதி யாக தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம்  கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் சுஜாதா விசாரணை  நடத்தி பாலசுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

கோரிக்கையும், அதிகாரிகள் அணுகுமுறையும் ! 

திருப்பூர், செப். 19 - திருப்பூர் கருப்பகவுண்டம்பா ளையம் முதல் அவிநாசி வரை செல் லும் ஏ 7 வழித்தடப் பேருந்தை அனைத்து நடைகளும் முழுமையாக  இயக்குமாறு மார்க்சிஸ்ட் கட்சியி னர் மண்டல மேலாளரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர். சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் பா. லட்சுமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராஜன்,  தாலுகா செயலாளர் ரமேஷ், மாதர்  சங்கத்தின் தெற்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.ஜானகி, வாலிபர் சங்க தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் த. ரங்கநாதன் ஆகியோர் திருப்பூர் மண் டல வணிக மேலாளர் ஜெகதீசன் மற் றும் மண்டல மேலாளர் (தொழில் நுட்ப  பிரிவு) யுவராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில், ஏ 7 வழித்தடப் பேருந்து  தினமும் மூன்று முறை இயக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த சில நாட் களாக காலை நேரத்தில் மட்டும் கருப் பகவுண்டம்பாளையத்துக்கு வந்து செல்கிறது. இரண்டு நடைகள் இயக் கப்படுவதில்லை. இதனால் பள்ளி  செல்லும் மாணவ, மாணவிகள்,  தொழிலாளர்கள், மருத்துவமனைக் குச் செல்ல வேண்டியவர்கள் உள்பட  பலரும் பேருந்து இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உடன டியாக ஏ 7 பேருந்தை முழுமையாக இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவமதிக்கவா அதிகாரிகள்? அதேசமயம் புகார் தரச் சென்ற வர்களிடம் அதிகாரிகளும் கண்ணிய மான முறையில் நடந்து கொள்ள வில்லை என்றும் அவர்கள் குற்றஞ் சாட்டினர். குறிப்பாக மண்டல அரசுப்  பேருந்து அலுவலகத்திற்குள் சென்று புகார் அளித்தபோதும், மேலாளர்கள் யுவராஜ், ஜெகதீசன் இருவர் மட்டும் இருக்கையில் அமர்ந் திருந்தனர். அந்த அறையில் வேறு  இருக்கைகள் எதுவும் போடப்பட வில்லை. வந்தவர்களை நிற்க வைத் தபடியே அவர்கள் அமர்ந்து கொண்டு அலட்சியமாக பதில் கூறி யது அவமரியாதை செய்வதாக இருந்தது என்றனர். அனைத்து அரசு அலுவலகங்களி லும் சந்திக்க வரும் பார்வையாளர் களை அமர வைப்பதற்கு இருக்கை கள் இருக்க வேண்டும் என்ற விதிமு றையை ஏனோ இந்த அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்றும் அவர் கள் கூறினர். இவர்களது புகார் பற்றி போக்கு வரத்து தொழிலாளர்களும் உறுதிப் படுத்தினர். மண்டல மேலாளர்களாக இருப்போர் வேண்டுமென்றே அவர் களது அறைக்குள் வரக்கூடிய பார் வையாளர், தொழிற்சங்க நிர்வாகி கள் உள்ளிட்டோரை அவமதிக்கும் உள்நோக்கத்துடன் இருக்கை போடாமல் இருப்பதாகவும், அதே  சமயம் தங்களுக்கு வேண்டப்பட்ட வர்களுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்து கொள்வதாகவும் கூறினர். இது குறித்து வணிக மேலாளர் ஜெகதீசனிடம் தீக்கதிர் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பொது மேலாளர் அறையில் இருக் கைகள் இருக்கும். இந்த அறையில்  இருக்கைகள் இல்லை என்று மழுப் பலாக பதில் அளித்தார். பின்னர் அதை சரி செய்து கொள்வதாக ஒப் புக்கு பதிலளித்தார்.

ரூ.1 கோடிக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப்.19 - சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த  வாரம் நடைபெற்ற ஏலத்தில்  3000 மூட்டைகள் நிலக்க டலை வந்திருந்தன. குவிண் டால் ஒன்றுக்கு, முதல் ரக  நிலக்கடலை  ரூ.7,100 முதல்  ரூ.7,300 வரையிலும், இரண் டாவது ரக நிலக்கடலை ரூ. 6,700 முதல் ரூ.7,000 வரை யிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.6,200 முதல் ரூ.6, 400 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1  கோடிக்கு ஏலம் நடைபெற் றது. இதில் 15 வியாபாரி கள், 427 விவசாயிகள் பங் கேற்றனர்.

தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்க அமைப்புதின விழா

தாராபுரம், செப். 19 - தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்கத்தின் அமைப்பு தின  விழா தாராபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. நெடுஞ் சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு கோட்டத் தலைவர் கே.வெங்கிடுசாமி தலைமையில் மாநில  தலைவர் மா.பாலசுப்பிரமணியன் சங்க கொடியை ஏற்றி வைத் தார். மாநில செயலாளர் சு.செந்தில்நாதன் நினைவு ஸ்தூ பியை திறந்து வைத்தார். மாநில பொதுசெயலாளர் ஆ.அம்ச ராஜ் கல்வெட்டை திறந்து வைத்தார். அரசு ஊழியர் சங்க கொடியை வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார் ஏற்றி  வைத்தார்.  இதைத் தொடர்ந்து அண்ணாசிலை முன்பு சாலைப்பணி யாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது. முடிவில் கோட்ட பொருளாளர் எஸ். முருகசாமி நன்றி தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருப்பூர், செப். 19 – திருப்பூரில் ஞாயிறன்று மகிளா நீதிமன்ற அரசு வழக் கறிஞர் மற்றும் அவரது மகள்  மீது கொலைவெறித் தாக்கு தல் நடத்திய சம்பவத்துக்கு  எதிர்ப்புத் தெரிவித்து திருப் பூர் மாவட்டத்தில் உள்ள பல் வேறு நீதிமன்றங்களில் வழக் கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்களன்று இந்த நீதி மன்றப் புறக்கணிப்பு மேற் கொள்ளப்பட்டது. வழக்கறி ஞர்கள் பாதுகாப்புச் சட் டத்தை அமல்படுத்த வலி யுறுத்தியும் பெண் வழக்கறி ஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

உதகை, செப்.19- குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை விரைந்து பிடிக்க வும், காவல் துறையினரின் கண்காணிப்பு பணிக்கும், குற்ற செயல்களை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் காவல் துறையினருக்கு உதவியாக உள்ளது. கோத்தகிரி நகரின் முக் கிய பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு, காவல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டி கடைகள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக் களை பொருத்துமாறு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதையடுத்து கோத்தகிரி பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரிகள் கேமராக்களை பொருத்தி னர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோத்த கிரி காந்தி மைதானத்தில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் கல் லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் கண்கா ணிப்பு கேமரா பதிவுகளை தேடி அலைந்தனர். மைதானம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தவிர, அப்பகுதியில் வேறு எங்கும் கேமராக்கள் இல்லாததால் குற்றவாளியை கண் டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து குஞ்சப்பனை சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோத் தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வெளியே சாலைகள் தெரியுமாறு கண்காணிப்பு கேமராக் களை பொருத்தி காவல் துறையினருக்கு உதவுமாறு காவல் உதவி ஆய்வாளர் சேகர் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து வியாபாரிகள் தங்களது கடைக ளுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை, செப்.19- பேரூர் சுற்றுவட்டார கிராமப் பகு திக்குள் சரிவர அரசு பேருந்து இயக்கப் படாததை கண்டித்து பொதுமக்கள் 2 அரசு பேருந்துகளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பேரூர் அடுத்த கரடிமடை, சென்னனூர், மத்திபாளையம், தண்ணீர் பந்தல், உள்ளிட்ட கிராம பகுதிக்குள் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள், சரிவர இயக்கப்படாததாக தெரிகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகளை கிரா மப்புரங்களில் முறையாக இயக்க கோரி யும், போக்குவரத்து நிர்வாகத்தை கண் டித்தும் அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பேரூர் போலீ சார் மற்றும் அரசு போக்குவரத்து டிப்போ மேலாளர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது  பள்ளிக்கு செல்லக்கூடிய நேரங்களில் அரசு பேருந்துகள் வராததால் குழந்தை கள் பள்ளிக்கு செல்ல முடியாமல், 2 கிலோமீட்டர் நடந்து சென்று மாதம்பட்டி பகுதியில் பேருந்து ஏறி பள்ளிக்கு சென்று வருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள் பணிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடனடி யாக இந்த 4 கிராமங்களுக்கும் முறை யாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று அறிவித்து விட்டு கிராமப்புற பேருந்து எண்ணிக் கைகளை குறைத்து விட்டனர். தொடர்ந்து நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசார் மற்றும் அரசு போக்கு வரத்து டிப்போ மேலாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால் மறியல் கைவிடப்பட்டது.

குறைதீர் கூட்டம்

ஈரோடு, செப்.19- ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் தலைமையில் மின்  பயனீட்டாளர்களின் மாதாந் திர குறை தீர்க்கும் நாள் கூட் டம் புதனன்று (நாளை) காலை 11 மணிக்கு செயற் பொறியாளர்  தலைமை யில் நடைபெறும். இக்கூட் டத்தில் பெருந்துறை கோட் டத்திற்குட்பட்ட ஈங்கூர், கொடுமணல், புதுப்பாளை யம், பல்லகவுண்டன்பா ளையம் ஆகிய பகுதிக ளில் உள்ள மின் பயனீட்டா ளர்கள் மேற்பார்வை பொறி யாளரை நேரில் சந்தித்து தங் களின் குறைகளை தெரி வித்து நிவர்த்தி பெறலாம்.




 

;