districts

img

சேலம் வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல் திருப்பூரில் கோபாவேச கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 13 - கஞ்சா விற்பனைக்கு எதிராக போராடிய சேலம் வாலிபர்  சங்க நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சமூக  விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி திருப்பூரில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலத்தில் லாட்டரி சீட்டு, கஞ்சா விற்பனைக்கு எதிராக  தொடர்ச்சியாக போராடி வரும் வாலிபர் சங்கத்தின் மாவட்ட  செயலாளர் பெரியசாமி மீது கஞ்சா விற்பனை செய்யும் சமூக  விரோதிகள் வியாழனன்று கொலைவெறித் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதைக் கண்டித்து, வாலிபர் சங்க வடக்கு மாநகர  கமிட்டியின் சார்பில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதி களை கைது செய்ய வலியுறுத்தி வாலிபர் சங்க வடக்கு மாநகர  பொருளாளர் கிருத்திகைவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன், வாலி பர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், வடக்கு மாநகர செயலாளர் எஸ்.விவேக் உட்பட திரளா னோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர். முடி வில் நவீன்குமார் நன்றி கூறினார்.