districts

img

முடி திருத்தக கடை முன்பு குப்பைத்தொட்டி பாஜக ஊராட்சி மன்ற தலைவரின் அராஜகம்

 தருமபுரி, ஜூலை 10- முடித்திருத்தக கடையை திறக்க விடாமல் குப்பை தொட்டிகள் வைத்த பாஜகவின் ஊராட்சி மன்ற தலைவரின் செயல் மக்களிடையே முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராஜசேகர் தரும புரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள் ளார். அதில்,தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேவுள்ள மானியதள்ளி கிராமத்தில் முடி  திருத்தும் நிலையம், (சலூன் கடை) நடத்தி வருகி றேன். எங்களுக்கு  சொந்தமான நிலத்தில் கடந்த 36 வருடங்களாக தனது தந்தை காலத்திலிருந்தே முடி திருத்தும் (சலூன் கடை) நடத்தி வருகி றேன். இந்நிலையில், மானியதள்ளி ஊராட்சி மன்ற தலைவரும், பாஜ மாவட்ட துணைதலைவருமான  சிவசக்தி என்பவர்,  சலூன் கடையினை திறக்காத வாறு கடை முன்னர் குப்பை தொட்டிகளை வைத்து, கொலை மிரட்டல் விடுத்து அராஜகம் செய்வது வரு கிறார்.  எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள தங்க ளது கடையினை மீட்டு தரவேண்டும்.  மேலும், பண பலம், அடியாள் பலம் கொண்ட பாஜக  நிர்வாகியான சிவசக்தியினை எதிர்த்து  தங்களால் போரடமுடியவில்லை, இது குறித்து  தொப்பூர் காவல் நிலைய போலீஸ் புகாரளித்து  விசாரணை நடந்து வருவதாகவும், இந்நிலையில், தொடர்ந்து சிவசக்தி மிரட்டல் விடுத்து வருவ தால், குடும்பமே வாழ வழியின்றி தவித்து வருகி றது. எனவே, மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாடு முத லமைச்சர் அவர்கள் தங்களை காப்பாற்ற வேண் டும். வாழ்வாதாரமாக இருந்து  வரும் கடையினை மீட்டு தர வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.

;