districts

img

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை

கோவை, மே 31- நல்லூர்வயல் பகுதியில் உள்ள குடியி ருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றை  காட்டு யானையை அப்பகுதி மக்கள் டார்ச்  லைட் அடித்து விரட்டினர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டா ரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவு  நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை ஊருக்குள்  புகுந்து விடுகிறது. இது அங்குள்ள வாகனங் களை தள்ளிவிட்டும், வீடுகளில் உள்ள மேற் கூரைகளை பிரித்து அரிசி, பருப்பு போன்ற பொருட்களை தின்றுவிட்டு செல்கிறது. விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தகவலறிந்து வரும் வனத் துறையினர் யானையை அங்கு இருந்து வனப்பகுதிக்குள் விரட்டி விடுகின்றனர். இந்நிலையில், மீண்டும் வியாழனன்று இரவு கோவை குற்றாலம் செல்லும் சாலை யில் நல்லூர்வயல் ஆதிவாசி மற்றும் பழங்கு டியினர் வசிக்கும் கிராமப் பகுதியில் நடைப்ப யிற்சி செல்வது போன்று ஒற்றை காட்டு யானை செல்கிறது. இதனை பார்த்த அப்ப குதி மக்கள், யானையை டார்ச் அடித்தும், சத்தமிட்டும் விரட்டினர். இக்காட்சிகள் தற் போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

;