districts

img

பொதுப்பாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்

அவிநாசி, பிப்.14. அவிநாசி அருகே வேலாயுதம்பா ளையத்தில்,  பொதுப்பாதையை ஆக்கிரமிக்க முயன்ற அதிமுக பிர முகரிடமிருந்து நிலத்தை மீட்க, இந்த இடம் பொதுவான கிணறு இருந்த  இடம் என்பதை நிருபிக்க தலித் மக் கள் உபகரணங்களுடன் களமிறங்கி  கிணற்றை தோண்ட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்பட்டது. அவிநாசி அருகே வேலாயுதம்பா ளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் கால னியில் நூற்றுக்கும் மேற்பட்ட தலித்  குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இந்த பகுதியில்  கன்னிமார் கோவில் உள்ளது. இக்கோவிலை இப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்கு அருகே வசித்து வரும் அதிமுக பிரமு கர் நடராஜ் என்பவர், தனது வீட்டுக் குச் செல்வதற்காக கோயில் வழித்  தடத்தைப் பயன்படுத்தி வந்துள் ளார். நாளடைவில், கோவில் அருகே  நடப்பட்டிருந்த வேல், கோவில் முன்பு போடப்பட்டிருந்த மேற்கூரை உள்ளிட்டவற்றை அகற்றி, கல் ஒன்றை நட்டு வைத்து, பாதையை அடைத்துள்ளார். இதனால், இப்ப குதி பொதுமக்கள் பாதையை பயன்ப டுத்தும் நிலை ஏற்பட்டது.  இதனையடுத்து, அவிநாசி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிக ளிடம் பொதுத்தடத்தை ஆக்கிரமித் துள்ளதாகவும், அதனை மீட்டுக்கொ டுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ள னர். ஆனால், இதுகுறித்து எந்த நடவ டிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்பட வில்லை என தெரிகிறது. இதனி டையே கன்னிமார் கோவில் திருவிழா  நடைபெற உள்ள நிலையில், கோயில் மேற்கூரையை அகற்றியது குறித்து அவரிடம் அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர். இதற்கு நீதி மன்ற உத்தரவுப்படி இந்த பாதை தனக்கு சொந்தமானது என்று தெரி வித்துள்ளார்.  இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பல வருடங்க ளுக்கு முன்பு இங்கு  பொது கிணறு  இருந்து வந்தது. காலப்போக்கில் அந்த கிணறு மறைந்து விட்டது. ஆனால், இது தன்னுடைய இடம்  என்கிறார். எனவே, இங்கு ஏற்கனவே  இருந்த கிணற்றை தோண்டி எடுத்து நிருபிக்கிறோம் என, பொது மக்கள் கிணற்றை  தோண்டும் பணியினை மேற்கொண்டனர். இதனால், அதிர்ச் சியடைந்த அரசு நிர்வாகம், பொது மக்களை தடுத்து நிறுத்த முயற்சித்த னர். ஆனால், கிணறு இருந்த ஆவ ணத்தை கொடுத்தால் மட்டுமே பணி  செய்வதை நிறுத்துவோம் என்று  தோண்டும் பணியை தீவிரப்படுத்தி னர். இதனையடுத்து, தற்பொழுது உள்ள வருவாய் பதிவேட்டை அதி காரிகள் காண்பித்தபோது, மறுப்பு தெரிவித்த அப்பகுதியினர், பழைய  வருவாய் பதிவேட்டை காண்பித் தால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் என்றனர். இதற்கு வரு வாய்த் துறையினர் காவல் துறை யினர் ஒரு வார காலம் அவகாசம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  கிணறு தோண்டுவதை தற்காலி கமாக நிறுத்தினர். இதனால் அப்ப குதியில் பரபரப்பு ஏற்பட்டது.