திருப்பூர், அக்.9 - கொரோனா காலத்தில் திருப்பூர் வட்டாரத்தில் நிறுத் தப்பட்ட பேருந்துகளை மீண் டும் இயக்க வலியுறுத்தி விவ சாய தொழிலாளர் சங்க மாநாட் டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கத் தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய மாநாடு பெருமாநல்லூரில் ஞாயிறன்று மாவட்டக்குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியம் தலைமை யில் நடைபெற்றது. ஆர்.சீனிவாசன் வரவேற் றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன் றியத் தலைவர் கே.ரங்கசாமி மாநாட்டைத் துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செய லாளர் ஆர்.காளியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.சண்முகம், விவசாய சங்கத் தலைவர்கள் ஆர்.ஆறுமுகம், எம்.கே. கோவிந்தசாமி, கே.பட்டுச்சாமி, கே.தனபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும், முதியோர் உதவித்தொகை 60 வயதான அனைவருக்கும் வழங்கிடவும், திருப்பூர் வட்டார கிராமங்களில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை உட னடியாக இயக்கவும், தேசிய ஊரக வேலைத் திட்டத்தை 200 நாள் வேலையாகவும், தின சரி சம்பளத்தை 600 ரூபாயாக உயர்த்தவும் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் 11 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. புதிய தலைவராக பரணி ஆர்.சீனிவாசன், செயலாளராக கே. சுப்பிரமணியம், பொருளாளராக கிருஷ்ண சாமி, துணைத்தலைவராக மூர்த்தி, துணைச் செயலாளராக முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் ஏ. பஞ்சலிங்கம் நிறைவுரை ஆற்றினார். கே.சி. குமரன் நன்றி கூறினார்.