districts

img

கால்நடை வளர்ப்பிற்கு மானியத்துடன் கடன்: விவசாய தொழிலாளர் மாநாடு கோரிக்கை

அவிநாசி, செப். 26 – கால்நடைகள் வளர்ப்பில் கூட்டுறவு வங் கிகள் மூலம் மானியத்தில் கடன் வழங்க அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கோரியுள்ளது அவிநாசியில் நடைபெற்ற இம்மா நாட்டில் விவசாய தொழிலாளர் சங்கத் தின் ஒன்றிய தலைவர் எஸ். மல்லப்பன் தலைமையேற்றார்.   மாநாட்டைதுவக்கி வைத்து விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சுந்தரம் உரையாற்றினார். விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாச லம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விவசாய தொழிலாளிக்கு தேசிய அள வில் ஒருங்கிணைந்த மத்திய சட்டமும், தனித் துறையை உருவாக்கக் கோரியும், தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பூண்டி நகராட்சி அவிநாசி பேரூராட்சி பகுதிகளில், அமல்படுத்த கோரியும், சேவூர் பகுதியில் 30  வருடங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனை  வழங்கிய இடத்தை வகை மாற்றம் செய்  கோரியும், ரேஷன் கடைகளில் வழங்கப்ப டும் உணவுப் பொருட்கள் தரமாகவும், சரியான அளவில் வழங்க கோரியும், 60 வய தான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம்  வழங்க கோரியும், கால்நடைகள் வளர்ப்பில்  கூட்டுறவு வங்கிகள் மூலம் மானியத்தில் கடன்  வழங்க கோரியும், தேசிய வேலை உறுதி  திட்டத்தில் வேலை நாட்கள் 200 ஆக உயர்த்தி,  இதில் பணியாற்றும் தொழிலாளிக்கு கூலி உயர்வு ரூ.600 வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புதிய நிர்வாகிகளாக ஒன்றிய தலைவர் வி.பி.முருகேஷ், ஒன்றிய செயலா ளர் ஏ.சண்முகம், ஒன்றிய பொருளாளர் கே. முருகன், துணைத் தலைவர் கே.குருநா தன், துணைச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி உள்பட 13 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் வேலாயுதம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன், விவ சாய சங்கத்தின் ஒன்றிய தலைவர் முத்துரத்தி னம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றிய குழு உறுப்பினர் வி. மோகனசுந்தரம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;