districts

img

தமிழ்நாட்டில் ஆகம கோவில்கள் இருக்கிறதா?

சென்னை, செப். 3- தமிழ்நாட்டில் ஆகம கோவில் கள் இருக்கிறதா? என்று வழக்க றிஞர் சிகரம் செந்தில்நாதன் கேள்வி  எழுப்பி உள்ளார். “அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, உயர்நீதிமன்ற அண்மைக்காலத் தீர்ப்பு” என்ற  தலைப்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக வழக்க றிஞர் அணி சார்பில் வியாழனன்று (செப்.1) ஆய்வரங்கம் நடை பெற்றது. ஆசிரியர் கி.வீரமணி பேசுகை யில், 3 சதவிகிதமாக இருக்கக்கூடி யவர்கள், 97 சதவிகிதமாக உள்ள வர்களை காலங்காலமாக எப்படி ஆண்டு கொண்டிருக்கிறார்கள்? அதற்குத் தந்திரங்கள்தான் ஆயுதம். அந்தத் தந்திரங்கள்தான் அவர்களுடைய பலம். அதே தந்தி ரத்தை ஒவ்வொரு காலகட்டத் திலும் அவர்கள் புகுத்திக் கொண்டி ருக்கிறார்கள். 

சமூக சீர்திருத்தமே

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது  உச்சநீதிமன்றத்தில் இதேபோன்ற வழக்கு விசார ணைக்கு வந்தபோது, நாத்தி கர்கள் அனைவரும் அர்ச்சகர் களாக்கி விட்டால் என்ன செய்வது  என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதில் அளித்த அப் போதைய அட்வகேட் ஜெனரல் அரசின் நடவடிக்கை சமூக சீர்தி ருத்தமே தவிர, மதச் சீர்திருத்தம் அல்ல என்று தெளிவாக எடுத்து ரைத்தார். எனவே அப்போதே  இந்த பிரச்சனை தெளிவுபடுத்தப் பட்டு விட்டது. இதில் குழப்பமே இல்லை என்றார் வீரமணி.

ஆகம கோவில்கள் இருக்கிறதா?:

வழக்கறிஞர் சிகரம் செந்தில் நாதன் பேசுகையில், ஒவ்வொரு முறை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்பு வரும் நேரத்தில் ஒருசிலர் எவ்வாறு  தந்திரம் செய்கிறார்கள் என்பதை விளக்கினார். தற்போதைய தீர்ப் பில்,ஆகமம் அல்லாத கோவில் களுக்கு மட்டுமே அனைத்து சாதி யினரும் அர்ச்சகர் உரிமை பொருந்தும் என்று சொல்வது மனித விரோத போக்கு என்று அவர் சாடி னார். இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறானது என்று குறிப் பிட்ட அவர் ஆகம கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்ற  கேள்வியை எழுப்பினார். டாக்டர்  கானே, பார்த்தசாரதி பட்டாச் சாரியா ஆகியோரின் கருத்தை  மேற்கோள் காட்டும் நீதிமன்றம்,  ஏன் ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜன்  குழுவின் அறிக்கையையும் மகா ராஜன் குழுவின் அறிக்கையையும் எடுத்துக் கொள்ளவில்லை? இந்த  தீர்ப்பில் நீதியரசர்.சொக்கலிங்கம்  தலைமையில் ஏற்படுத்தப்பட்டி ருக்கும் குழு கோவிலுக்கு செல்லும் போது இதையெல்லாம் கணக்கில் கொண்டு, பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பதையும் அவர்  வலியுறுத்தினார். ஜனவரி முதல் நாளன்று  புத் தாண்டு கொண்டாடப்படும் எந்த கோவிலும் ஆகம கோவில் அல்ல  என்று கூறி, வரிசையாக எது வெல்லாம் ஆகம கோவில்கள் அல்ல என்பதை பட்டியலிட்டு, கடவுளை ஆரியமாக்குவதுதான் தமிழ்நாட்டில் நடந்தது, ஆரியத் தின் பிடியில் தமிழரின் மரபும் சமயமும் சிக்கிக் கொண்டது என் பதை சான்றுடன் விளக்கி, தமிழ் நாட்டில் ஆகம கோவில்களே தற் போது இல்லை. இதைத்தான் இந்த  குழுவிடம் நாம் பரிந்துரை செய்ய  வேண்டும் என்றும் அவர் அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆகமத்தை விட அரசியல் சட்டம் பெரிது

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் பேசுகை யில், 93 பக்கம் கொண்ட தீர்ப்பி னைப் பக்கங்கள் வாரியாக பிரித்தும், இதற்கு முன்னால்  வழங்கப்பட்ட சேஷம்மாள் வழக் கின் தீர்ப்பு, ஆதிசிவாச்சாரியார் வழக்கின் தீர்ப்பு ஆகியவற்றையும், அதன் சாரம்சங்களையும் கோடிட்டு காட்டி, இந்த வழக்கில் அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். உச்ச நீதிமன்றத்தில் ஒரே சமூகத்தின் ஆதிக்கம் இருக்கிறது. பெரும் பாலானோர் அங்கே ஒரு சமூகத் தின் ஆதிக்கத்தில் இருக்கின்ற போது, இந்த பிரச்சனைக்குத் தீர்வு  காண்பதற்கு நீதிமன்றம் தகுதி யான இடமாக அமையாது. எனவே,  மாநில அரசின் சார்பில் சட்டத்திருத் தத்தை கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆகமத்தை விட அரசியல் சட்டம் தான் பெரிது என்றும் அவர் நினைவுபடுத்தினார். தற்போதைய தீர்ப்பு அரச மைப்புச் சட்டத்திற்கு விரோத மானது என்று குறிப்பிட்ட அரிபரந் தாமன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு என்ன தகுதி  என்பதை வேண்டுமானால் விவா திக்கலாமே ஒழிய, அவர்களை உள்ளே அனுமதிப்பதற்கு தடை விதிப்பது என்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று சாடினார்.
 

;