districts

img

அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம்

சேலம், செப்.21- அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான அடுக்குமாடி கட்டிடம் கட்ட வேண்டும் என சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தார். தமிழ்நாடு முதல்வர், சட்டமன்ற தொகுதியில் தீர்க்கப் படாமல் முக்கியமான கோரிக்கைகளை தேவை மற்றும்  அவசியத்தின் அடிப்படையில் ஆராய்ந்து, அவற்றினை முன் னுரிமைப்படுத்தி, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்க லாம் என அறிவித்துள்ளார். அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் இரா.இராஜேந்திரன், தனது சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட பொதுமக்களின் நலன் சார்ந்த 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகத்திடம்  வழங்கினார். அம்மனுவில், குடிநீர் விநியோகம், புதிய பள்ளி  வகுப்பறைக் கட்டிடங்கள், உயர்மட்ட பாலங்கள் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் புறநோயாளிகளுக்கான அடுக்குமாடி கட்டடம் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் தெரிவிக்கப்பட் டுள்ளன.

;