கோவை, மே 15- நீண்ட நாட்களாக பள்ளி வராத 5,662 குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வர செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவு கள், மூன்றடுக்கு குழு கூட்டத்தில் எடுக்கப் பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் கல்வித்துறை சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்திகு மார் பாடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகரக் காவல் ஆணையர் பால கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணை யர் சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வதோசுமன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள், சமூக நலத் துறை அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர், சுகாதாரத்துறை அலு வலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக இக்கூட்டத்தில், பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளி வராத 5,662 குழந்தைகளை கிரா மம் வாரியாக பெற்றோர்கள் மற்றும் மாண வர்களை நேரடியாக சந்தித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர செய்ய தேவை யான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வழைத்து சிறப்பு பயிற்சி அளித்து வரும் துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றல் தடுக்க தொடர்ந்து கல்வி கற்க தேவையான நடவ டிக்கையை துறை அலுவலர்கள் ஒருங்கி ணைந்து எடுக்க வேண்டும். போதை பொருள் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.