districts

தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பதிவிற்கு கட்டணம் வசூல்

உடுமலை, டிச.12- மத்திய அரசின் தொழிலாளர் நலவாரியத்தின் உறுப்பினர் பதி வுக்கு அதிக கட்டணம் வசூலிக் கும் பொது சேவை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க  கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசின் சார்பில்  அமைப்பு சாரா தொழிலா ளர்களை கணக்கெடுக்கும் வகை யிலும், உறுப்பினருக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும் வகையில் இ-சரம்( E-SHARM ) சேவை  தொடங்கபட்டது. தொழிலாளர் களை பதிவு செய்ய கிராமப்புற தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டது. இதன்படி இவர் கள் நடத்தும் பொது சேவை மையத்தில் தொழிலாளர்களை பதிவு செய்ய எவ்வித கட்ட ணம் வாங்காமல் பதிவு செய்ய  வேண்டும் என்ற நிபந்தனை இருந்தபோதும் தொழிலாளர் களிடம் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள் ளது. குறிப்பாக, உறுப்பினர்களை பதிவு செய்ய பல இடங்களில் ஊராட்சி மன்ற அலுவலகக்தை பொது சேவை மைய அலுவ லகமாக பயன்படுத்தி வருவதால் தொழிலாளர்களிடம் அவர்கள் கேட்கும் பணத்தை தருவது வாடிக்கையாக உள்ளது.

நலவாரி யத்தில் தொழிலாளர்களிடம் உறுப்பினராக சேர்க்க பல நிபந் தனைகளை அரசு விதித்த  போதும் எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் பணத்தை பெற்றுக்  கொண்டு பதிவு செய்வதாக புகார் ஏழுந்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஜெக தீசன் கூறுகையில், மத்திய  அரசின் திட்டமாக இ-சரம்( E-SH ARAM) என்ற திட்டத்தின்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எண்ணிக் கையை அறியும் வகையிலும், கடந்த கொரானா தொற்று ஏற்பட்ட போது அங்கீகாரம் இல்லாத தொழிலாளர்களுக்கு உதவி செய்வதில் தாமதம் ஏற்பட்டதை இனி வரும் காலங்களில் தவிர்க்கும் வகையிலும் பல நிபந்தனைகளுடன் பொது சேவை மையத்தின் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டது. இந்த பதிவு மையம்  தனி அலுவலகத்தில்  இயங்காமல் பல இடங்களில் ஊராட்சி மன்ற கட் டிடத்தில் இயங்குவதால் பல குளறுபடிகள் ஏற்படுகிறது. மேலும் உறுப்பினர் பதிவுக்கு கட்டணம் என்ற பெயரில் அதிக மான தொகை வசூல் செய்து வரு கிறார்கள். இதனை தடுக்கும் வகையில் வெளிப்படையான நிர் வாகத்தை பொது சேவை மையத் தினர் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

;