கோவை, டிச. 12 – கோவையில் போக்குவரத்து சிக்னல் இல்லாத நான்கு வழிச் சாலையால் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். கோவை காந்திபுரம் பேருந்து நிலை யத்தை அடுத்துள்ள சித்தாப்புதூர் ராம கிருஷ்ணா மருத்துவமனை அருகே நான்கு சாலைகள் இணையும் பகுதி அமைந்துள் ளது. அவிநாசி சாலை, காந்திபுரம் சாலை, ஆவாரம்பாளையம் சாலை மற்றும் சித் தாப்புதூர் சாலையை இணைக்கும் இந்த முக்கியப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங் குபடுத்த காவலர்கள் யாரும் நியமிக்கப் படவில்லை. இதற்கிடையே, நவஇந்தியா மற்றும் 100 அடி ரோட்டை இணைக்கும் பாலம் இதன் மேலே கட்டப்படும்போது இப்பகு திக்கான சிக்னல் பழுதாகியுள்ளது. இதன் பின் கடந்த பல மாதங்களாக இந்த சிக் னல் பழுது பார்க்கப்படவில்லை.
இவ் வாறு நான்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையில் சிக்னல் இல்லாததன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, கனரக வாகனங்களி லிருந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் வரை விரைவான பயணத்திற்காக பெரும்பா லும் இப்பாதையையே பயன்படுத்துவ தால் பெரும் விபத்துகள் கூட நிகழ வாய்ப் புள்ளது. எனவே பழுதடைந்த சிக்னலை விரைந்து பழுதுபார்ப்பதுடன், அப்பகுதி யில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்களை நியமித்திட வேண்டுமென அப்பகுதிப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.