districts

img

அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட பேரவை வலியுறுத்தல்

கோவை, டிச.12–  ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பழிவாங்கும் நட வடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என அரசு ஊழியர் சங்க பேரவை வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆவது கோவை மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை சனியன்று அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் சங்கத்தின் இணை செயலாளர் சாரதாமணி தலை மையில் நடைபெற்றது. இப்பே ரவையை அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் எஸ். சந்திரன் துவக்கி வைத்து உரை யாற்றினார். இதில், ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும்.

5568 ஊழி யர்கள் மீதான வழக்குகளை திரும்பபெற வேண்டும். புதிய ஓய் வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். தலை நகர் தில்லியில் போராடும் விவ சாயிகளுக்கு அரசு ஊழியர் சங் கம் தங்களது முழு ஆதரவை தெரி வித்துக் கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

இதில் தலைவராக சி. எஸ்.பால்ராஜ், துணை தலைவர் களாக எஸ்.சதிஷ், மா.சாமிநாதன், ஆர்.கணேசன், ப.ஜெகநாதன், செயலாளராக பி.செந்தில்குமார், இணை செயலாளர்களாக இர. மாலதிராணி, எஸ்.சாரதாமணி, ஆர்.பாக்கியராஜ், ஈ.வெ.ரங்க ராஜ் பொருளாளராக பி.நடரா ஜன், தணிக்கையாளர் மா.அய்யா சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். முடிவில், மாநில துணை தலைவர் எம்.சீனிவாசன் நிறை வுரையாற்றினார். இப்பேரவை யில் மாவட்டம் முழுவதும் இருந்து திரளான அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.