அவிநாசி, டிச. 18- அவிநாசி,சேவூர் ஒன்றிய பகுதிகளில் ரூ.3 கோடியே 18 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுப் பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார். அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூர் ஒன்றிய பகுதிகளில் மொத்தம் ரூ.3 கோடியே 18 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை தி.மு.க துணை பொதுச் செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப் பினருமான ஆ.ராசா வளர்ச்சிப் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி திருப் பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ், திமுக அவிநாசி ஒன்றிய செயலாளர் பழனிசாமி, அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் நடுவச்சேரி கே. சி.வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.