districts

img

பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் ஆ.ராசா எம்.பி., பேச்சு

மே.பாளையம், நவ.9- நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றியத் தில் ஆளும் மதவாத பாஜக அரசை  தோற்கடிக்க இந்தியா கூட்டணிக்கு  வாக்களிப்பது  அவசியம் என திமுக நீல கிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா  பேசினார். கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்வு  தொடர்பாக பல்வேறு மக்கள் நலத்திட்ட  உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக திமுக-வின் துணை பொதுச்செய லாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பி னருமான ஆ.ராசா, மேட்டுப்பாளையம்  வந்திருந்தார். அப்போது, பெள்ளேபா ளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன் குன்று பகுதியில் மக்களிடையே உரை யாற்றிய ஆ.ராசா, “வரும் நாடாளு மன்ற தேர்தலில் நான் எனக்கு வாக்களி யுங்கள் என கேட்கவில்லை, திமுக- வுக்கு வாக்களியுங்கள் என கேட்க வில்லை, மதவாத அரசியல் செய்து  வரும் ஒன்றிய பாஜக அரசை தோற்க டிக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிங் யுங்கள் என பணிந்து கேட்டு கொள்கி றேன். பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்க ளுக்கு பாதுகாப்பில்லை, கிறிஸ்துவர்க ளுக்கு பாதுகாப்பில்லை, பட்டியலின  மக்களுக்கு பாதுகாப்பிலை, பெண்க ளுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை  இனியும் தொடரக் கூடாது” என்றார்.