districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

திருப்பூர் ஆட்சியரகத்தில் பிளேடால்  கையை அறுத்து பெண் தற்கொலை முயற்சி

திருப்பூர், மே. 4 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கையை அறுத்து தற்கொ லைக்கு முயன்ற பெண்ணால் வியாழ னன்று பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் வழக்கம்போல பரபரப்பாக  காலை இயங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தைகளுடன் ஒரு பெண் அங்கும் இங்குமாக சென்று  கொண்டிருந்தார். ஆட்சியர் அலுவலக  இரண்டாவது தளத்திற்கு சென்ற அந்த  பெண் திடீரென தனது கையில் பிளே டால் அறுத்துக் கொண்டு தற் கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்ததும் அங்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு  நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு  சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், தற்கொலைக்கு முயன்ற  காரணம் குறித்து பெண்ணிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். அப்போது  போலீசாரிடம் அந்த பெண் கூறியதா வது:- எனது பெயர் செண்டிலா(35). திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் முருகன். எங்களுக்கு இரண்டு குழந் தைகள் உள்ளனர்.எனது கணவர் முரு கன் மீது நல்லூர் போலீசார் கொலை  முயற்சி வழக்கு பொய்யாக போடுவ தற்கு முயற்சி செய்து வருகிறார்கள். எனது கணவர் மீது பொய் வழக்கு போடு வதை கண்டித்து தற்கொலைக்கு முயன் றேன். இவ்வாறு அவர் கூறினார். 

வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை வனத்துறை அமைச்சர் தகவல்

கோவை, மே 4- வனவிலங்குகளை பாதுகாக்க தனி நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை  அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்  கோவையில் சாடிவயல் யானைகள் முகாம், சிறுவாணி குடி நீர் சுத்திகரிப்பு நிலையம், கோவை குற்றாலம் ஆகிய இடங் களில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது  அங்குள்ள மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், சாடிவயல் யானைகள் முகாமை  மேம்படுத்த ரூ.8 கோடியும், கோழிக்கமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்துவதற்கு ரூ.5 கோடியும், தெப்பக் காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடியும் அறி விக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு  வந்து கண்டு களிக்கும்படியும் இவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும்படியும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். மேலும், முதுமலை  யானைகள் முகாமில் யானை பாகன்களுக்கும் உதவியாளர் களுக்கும், வீடு கட்டுவதற்கு ரூ.10 லட்சம் தரப்பட்டுள்ளது.  மேலும், ஊக்கத் தொகையாக ரூபாய் ஒரு லட்சமும்  ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறை யையும் கூடிய விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும். தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு வனப்பகுதிகளை பாதுகாப்பது, வன விலங்குகளை பாதுகாப்பது போன்றவற்றிற்காக தனி நிதி  ஒதுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம். கோவை குற்றா லத்தில் சுற்றுலா பயணிகளுக்கான பாதைகளை சீரமைத்து தேவையான கழிப்பறை வசதிகள் அனைத்தையும் மேற் கொள்வதற்கு ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. மேலும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வனப் பகுதிக்குள் எந்தெந்த சாலைகளை சரி செய்ய முடியுமோ?  அவற்றை சரி செய்வோம். மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம், என்றார்.

மழையால் மல்லிகை விலை உயர்வு

கோவை, மே 4- தற்போது பெய்து வரும்  கோடை மழையால் மல் லிகை விலை உயர்ந்துள் ளதாக வியாபாரிகள் தெரி வித்துள்ளனர். வெயில் காலம் துவங் கியதில் இருந்து, பூக்கள் உற்பத்தி அதிகரித்து, உதிரிப்பூக்களின் விலை வீழ்ச்சியடைந்தது. தற் போது தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழையால், பூக்கள் உதிர்ந்து உற்பத்தி  குறைந்துள்ளது. இதனால், கோவை பூ மார்க் கெட்டுக்கு வரும் மல்லிகைப்பூ வரத்து குறைந்து, விலை  உயர்ந்துள்ளது. அதன்படி,  புதனன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ 700 ரூபாய்க்கு விற்பனையானது. 

திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூராட்சிகள்

ஈரோடு, மே 4- ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத பகுதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர்  வீடுகளில் கழிப்பிடம் கட்டித்தரப்படுகிறது. பேரூராட்சி பகுதிகளிலும் வீடு, வீடாக கணக் கெடுப்பு நடத்தி கழிப்பிடம் இல்லாத வீடு களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுக்கப்படு கிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சி பகுதிகள் திறந்த வெளியில் மலம்  கழித்தல் இல்லாதவைகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.  இதுகுறித்து மண்டல உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகளில் 630  வார்டுகள் உள்ளன. இவற்றில் சுகாதாரம் சார்ந்த ஆய்வில் தனி நபர் கழிப்பிடம் இல் லாத வீடுகளுக்கு உடனடியாக கட்டித்தரப் படுகிறது. இதன்படி, கடந்த 2015–16 ஆம் ஆண்டில்  5 ஆயிரத்து 264 தனி நபர் வீடுகளிலும், 2016 - 17 ஆம் ஆண்டில் 11 ஆயிரத்து 104 வீடு களிலும், 2017–-18 ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து  134 வீடுகள், 2018 –19 ஆம் ஆண்டில் 50 வீடு களிலும் கழிப்பறை கட்டி தரப்பட்டது. இதற்கு  ரூ.16.44 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன்பின் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2020 – 21 ஆம் ஆண்டில் 50 கழிப்பறை ஒதுக்கீடு  செய்து 47 வீடுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 2021–22 ஆம் ஆண்டில் 282 தனி நபர் வீடு களில் கழிப்பறை ஒதுக்கீடு செய்து 166 வீடு களிலும், 2022–-23 ஆம் ஆண்டில் 585 வீடு களுக்கு கழிப்பறை ஒதுக்கீடு செய்து 278 வீடு களுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீத முள்ள வீடுகளுக்கு பணிகள் நடந்து வரு கின்றன. இதன்படி, 42 பேரூராட்சிகளிலும் திறந்த  வெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூ ராட்சிகளாக அறிவித்து, ஒன்றிய அரசின் தர ஆய்வுக் குழுவால் சான்று வழங்கப்பட்டுள்ளது. பேரூ ராட்சி பகுதியில் கழிப்பிடங்கள் பயன்படுத் துதல், கழிவுகளை மக்கும், மக்காத கழிவு களாக தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒப்பந்த அடிப் படையில் பரப்புரையாளர்கள் 104 பேர் பணி  செய்து உறுதி செய்து வருகின்றனர், என் றனர்.

கோடை கால சிறப்பு முகாம்

தருமபுரி, மே 4- தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் மாணாக்கர்களுக் கான கோடை கால சிறப்பு முகாம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய பள்ளி மாணவ, மாணவிக ளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மாவட்ட மைய  நூலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரி தலைமை வகித்தார். முதல்நிலை நூல கர் மாதேஸ்வரன் வரவேற்றார். இம்முகாமில் பட்டதாரி ஆசிரி யர் முனிராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு கதைகளை கூறி சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில்  2 ஆம் நிலை நூலகர் திருநாவுக்கரசு, நூல் கட்டுநர் சரவணன், மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் திருமலைக் குமாரசாமி மற்றும் மாவட்ட நூலக அலுவலக பணியா ளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், நூலக நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 2 ஆம் நிலை நூலகர் சுப்ரமணி நன்றி கூறினார்.

மழையால் மல்லிகை விலை உயர்வு

கோவை, மே 4- தற்போது பெய்து வரும் கோடை மழையால் மல்லிகை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், வடகோவை பகுதியில் உள்ள பூ  மார்க்கெட்டுக்கு நீலகிரி, மேட்டுப்பாளையம், சத்தியமங்க லம், ஈரோடு, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இருந்து, உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெயில் காலம் துவங்கியதில் இருந்து, பூக்கள் உற்பத்தி அதிகரித்து, உதிரிப்பூக்களின் விலை வீழ்ச்சியடைந்தது. கடந்த இரண்டு மாதங்களாக, மல்லிகை விலை கிலோ 300 ரூபாய்க்கு மேல் அதிகரிக்க வில்லை. மற்ற உதிரிப்பூக்களும் குறைவாகவே விற்பனை யானது. தற்போது தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழையால், பூக்கள் உதிர்ந்து உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், கோவை பூ மார்க் கெட்டுக்கு வரும் மல்லிகைப்பூ வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. அதன்படி புதனன்று ஒரு கிலோ மல்லி 600 ரூபாய்க்கு விற்பனையானது. சாமந்தி கிலோ 380 ரூபாய்க்கும், முல்லை கிலோ 240 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ 320 ரூபாய்க்கும், சம்பங்கி 80 ரூபாய்க் கும் விற்பனையானது.

தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

நாமக்கல், மே 4- பரமத்திவேலூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப் பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய் கள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. சாலை யில் செல்லும் பொதுமக்களையும், ஆடு மற் றும் கன்று குட்டிகளையும் கடித்து வருவ தால், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டி  பாதிக்கப்பட்டவர்கள் பரமத்திவேலூர் பேரூ ராட்சி இளநிலை உதவியாளர் அண்ணா துரையிடம் புகார் மனு அளித்தனர். அம்மனு வில், பரமத்திவேலூர் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் தெருநாய்கள் மிக வும் அதிகமாக உள்ளன. கடைவீதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக் களை வெறிநாய்கள் துரத்தி துரத்தி கடித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பயந்து தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். கடந்த மே 1 ஆம் தேதி வெள்ளாளபாளை யம் ராமசாமி என்பவர் வீட்டில் புகுந்த வெறி நாய், 5 ஆடுகளை கடித்து கொன்ற. தற்போது, புதனன்று வெள்ளாளபாளையம், பாலக்காடு  பகுதியில் ராஜா என்பவர் மாட்டு கொட்டை யில் புகுந்து, பிறந்து ஒரு நாளே ஆன  கன்று குட்டியை தெரு நாய்கள் கடித்ததில், அந்த கன்று குட்டி இறந்து விட்டது. மேலும், இப்பகுதி வீடுகளில் வளர்க்கப்படும் கோழி களையும் தினந்தோறும் நாய்கள் கடித்து வரு கிறது. எனவே பொதுமக்களுக்கும், கால் நடைகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் வெறி நாய்களை, கட்டுப்படுத்த பேரூ ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மலை கிராமங்களுக்கு அதிநவீன தொலை தொடர்பு வசதி

சேலம், மே 4- சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மலை கிராமங்களுக்கு அதிநவீன தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், அருநுாற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியிலுள்ள பெலாப்பாடி, பெரியகுட்டி மடுவு, சின்னகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணுார், கெங்கவல்லி வட்டம், கொல்லிமலை பகுதியி லுள்ள சேரடிமூலை, பச்சமலை யிலுள்ள மண்மலை, வேங்கமுடி, ஆத்துார் ஒன்றியம், பைத்தூர் பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை. இந்த நவீன காலத்திலும் செல்போன் வசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. எனவே, அதிநவீன கோபுரங்களை அமைத்து செல்போன் சேவை வழங்க வேண்டும் என மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறு வனத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஒன்றிய அரசின், மலை கிராமங்களுக்கு நவீன வசதி கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆத்தூர் தொலை தொடர்பு கோட் டத்தில் பெலாப்பாடி, பெரிய குட்டிமடுவு, சின்ன குட்டிமடுவு, சந்துமலை, மண்ணுார், சேரடி மூலை, மண்மலை, வேங்கமுடி ஆகிய 8 இடங்களில், கண்ணாடி யிழை கேபிள் இணைப்புடன் அதி நவீன 4 ஜி செல்லிடப்பேசி கோபு ரங்கள் அமைக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கி யுள்ளது. இத்திட்டப்பணிகள் நிறைவடைந்ததும், இதுவரை செல்லிடப்பேசி சேவை வசதி யில்லாத அனைத்து மலை கிராம மக்களுக்கும் அதிநவீன செல்லிடப்பேசி வசதி கிடைக் கும் என்பதால் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

முட்டை விலை உயர்வு

நாமக்கல், மே 4- நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந் தது. இதற்கிடையே புதனன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 425 காசு களாக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இதேபோல் ஏற்று மதி ரக முட்டையின் கொள் முதல் விலை 415 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. கறிக்கோழி கிலோ  ரூ.103க்கும், முட்டைக்கோழி  ரூ.77க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.