districts

img

வழி தவறி நகரத்திற்குள் வந்த காட்டு மாடு

கோவை, செப்.19 -  வழி தவறி நகர்ப்பகுதிக்குள் நுழைந்த காட்டு மாடு  பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்ற னர்.  கடந்த மூன்று நாட்களாக  சரவணம்பட்டி கீரணத்தம் பகுதி களில் காட்டு மாடு ஒன்று நடமாடுவதாக வனத்துறை அலு வலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடி யாக அந்த பகுதிக்கு வந்த 30 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் காட்டு மாட்டை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதை யடுத்து சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் தென்பட் டது. பின்னர் இரவு வனப்பகுதிக்குள் புகுந்ததால் தென்பட வில்லை. இந்நிலையில் திங்களன்று காலை மீண்டும் சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி பகுதியில் நடமாட்டத்தின் போது காட்டு எருமை தென்பட்டது.  இத னையடுத்து அதனை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிர மாக ஈடுபட்டனர். இந்நிலையில், வனத்திலிருந்து வெளியே வந்து கடந்த 3 நாட்களாக சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த நிலையில் மைலம்பட்டி தனம் நகர்  பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இத னைத்தொடர்ந்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பின்ன வனப்பகுதியில் விடுதற்கான முயற்சியை மேற்கொண்டனர். இதனிடையே மூன்று நாட்களாக போக்கு காட்டி வந்த  காட்டு மாடு வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி யதில் அடுத்த ஐந்து நிமிடத்தில் மயங்கிய காட்டு மாட்டை  வனத்துறை வண்டியில் ஏற்றிதடாகம் வனப்பகுதிக்கு  கொண்டு சென்று விட்டனர்.