districts

புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை: நகராட்சி அதிகாரிகள் உறுதி

கோவை, ஜூலை 30- பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத் தில் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்து பள்ளி மாணவி காயம் அடைந்த நிலையில், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதியளித் துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி எம்.ஜி.ஆர். நக ரைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரு டைய மகள் ஜனனி (17), கோட்டூர் சாலையி லுள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் சனியன்று மாலை பள்ளி முடிந்து வீட் டிற்கு செல்வதற்கு பொள்ளாச்சி பழைய  பேருந்து நிலையத்தில், பேருந்திற்காக காத்தி ருந்தார். அப்போது பேருந்து நிலையத்தின் மேற்கூரை காங்கிரீட் திடீரென்று பெயர்ந்து விழுந்தது. அந்த சத்தம் கேட்டு அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்த னர். இதற்கிடையே மேற்கூரை காங்கிரீட் விழுந்ததில் மாணவி ஜனனி காயம் அடைந் தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள் ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு நகர காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அதி காரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  ஆய்வு செய்தனர்.

இதில் மேற்கூரை காங்கி ரீட் மற்றும் தூண்கள் வலுவிழந்தும், கட்டடம் மோசமான நிலையில் இருப்பதும் தெரிய வந் தது. இதையடுத்து உடனடியாக கான்கிரீட் பெயர்ந்து விழும் பகுதியை சுற்றியும் தடுப்பு கள் வைத்து அடைக்கப்பட்டன. இதை அறி யாமல் பயணிகள் சிலர் உள்ளே சென்று உட் கார்ந்து இருந்தனர். அவர்களிடம் போலீசார், நகராட்சி அதிகாரிகள் கட்டடம் மோசமாக உள்ளதாக கூறி வெளியே அனுப்பினர். இத னால் நெகமம், பெதப்பம்பட்டி, தாராபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள்  உட்காருவதற்கு இருக்கை இல்லாமல் நீண்ட  நேரம் பேருந்துக்காக காத்து நிற்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறு கையில், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலைய கட்டடம் கட்டப்பட்டு 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் கட்டடம் மிகவும் மோச மான நிலையில் உள்ளது. மழைநீர் தேங்குவ தால் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழு கிறது. இதனால் ஆபத்து ஏற்படுவதை தவிர்க் கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக பயணிகள் செல்ல தடை விதிக் கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் உள்ளே  செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, ஏற்கனவே மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது போன்று, நகராட்சி பொது நிதி மூலம் மேற்கூரை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும், என்றனர்.