தருமபுரி, செப்.22- அரசு நிகழ்ச்சிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் கூடாது என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரி களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி யில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளா கத்தில் மாவட்ட ஊராட்சி நிதியி லிருந்து ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி செப்.22ஆம் தேதியன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கட்டுமான நடைபெறும் இடத்தில் செங்கல் மற்றும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், ‘அரசு விழாகளில் மதம் சார்ந்த பூஜை நடத்தகூடாது என்று உங்களுக்கு எத்தனை முறை சொல்வது, ஒவ்வொரு முறையும் சொல்லவேண்டுமா, நீங்களெல்லாம் திருத்த மாட்டிங்களா’ என்று அதிகாரிளை எச்சரித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் ஆகி யோருடன் நூலகம் கட்டும் பணியை தொடக்கிவைத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரியில் 1 .38 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணியை தொடங்கி வைக்க தருமபுரி திமுக எம்.பி., செந்தில் குமார் வருகை புரிந்தார். அப்போது பொதுப் பணித்துறை சார்பில் பூமி பூஜை செய்ய அர்ச்சகர் ஒருவர் வர வழைக்கப்பட்டிருந்தார். இதைக்கண்ட செந்தில்குமார், அரசு விழாவில் குறிப் பிட்ட ஒரு மதத்தின் சடங்குகள் எதற்கு என கேள்வி எழுப்பியதுடன், பொதுப் பணித் துறை அதிகாரியை அழைத்து கண்டித்தார். ஆனால் இதனை தொடர்ந்தும் தருமபுரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் மதம் சார்ந்த சடங்கு கள் நடத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.ஒரு மதம் சார்ந்த சடங்கு களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் நடத்திவருவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதி ரான என பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.