districts

img

5 ஆயிரம் பேர் முதலுதவி செய்து கோவையில் சாதனை

கோவை, செப்.10- உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, கோவையில் 5 அயிரத்து 386 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்று முதலு தவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி செய்து உலக சாதனை படைத்தனர். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் உலக முதலு தவி தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்ஜிஒ இணைந்து மாபெ ரும் உலக சாதனையாக அரசு பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவி யர்கள் பங்கு பெற்ற முதலுதவி விழிப்பு ணர்வு செய்முறை பயிற்சி மாவட்ட ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் சனியன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 386 பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கு  பெற்று FIRST AID BLS (Basic Life Support) என்ற வடிவில் முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சியினை மேற்கொண்டனர்.

மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக மீட்பதற்கான அடிப்படை முதலுதவி சிகிச்சைகான பயிற்சி இந்நிகழ்ச்சியில் மேற் கொள்ளப்பட்டது. இதையடுத்து முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சிக்கான உலக சாதனைக்கான சான்றிதழினை ஆசியா  புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அட்ஜடிகேட்டர் விவேக் நாயர், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மேலும் ஒரு மிகப் பெரிய சாதனையாக போதைப் பொருட்க ளுக்கு எதிரான உறுதிமொழியினை 5 ஆயி ரத்து 386 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்களும் ஏற்றுக்கொண்டனர். மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளும் கோவை மாவட் டத்தை பொறுத்த வரையில் மிகப்பெரிய சாத னையாக கருதுகிறோம் என ஆட்சியர் ஜி. எஸ்.சமீரன் பெருமிதம் தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணை யாளர் மு.பிரதாப், வேளாண்மை பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், துணை ஆணையாளர் ஷர்மிளா, அலெர்ட் என்ஜிஒ தலைவர் மைக் முரளிதரன், நிறு வனர் மற்றும் அறங்காவலர் கலா பாலசுந்த ரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;