districts

img

கண்களை கட்டி, கருப்பு முகமூடி அணிந்து இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் ஓட்டிய மேஜிக் கலைஞர்

கோவை, மே 30- சாலை விபத்து மற்றும் ஹெல்மட்  அணிவதன் அவசியம்  குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை யில்  கண்களைக் கட்டிக் கொண்டு, கருப்பு முகமூடி அணிந்தபடி இரு சக்கர  ஆம்புலன்ஸ் வாகனத்தை மேஜிக் கலைஞர் ஓட்டினார்.  கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை  காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பிரபல மேஜிக் கலைஞர் தயா  கண்களை கட்டிக் கொண்டு தலையில்  முகமூடி அணிந்தபடி ராயல் கேர் மருத் துவமனையின் இரு சக்கர ஆம்புலன்ஸ்  வாகனத்தை இயக்கினார். போக்குவ ரத்து நெரிசல் நிறைந்த காந்திபுரம் பகு தியில் இருந்து கிராஸ்கட் சாலை, வட கோவை வழியாக ஆர்.எஸ்.புரம் மாநக ராட்சி கலையரங்கம் வரை சென்றார்.  முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மருத்துவர் மணி செந்தில் குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசி னர். அப்போது, மாநகர காவல் துறை  ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகை யில், கண்களை கட்டிக் கொண்டு முக மூடி அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டு வது என்பது தகுந்த பயிற்சி இருந்தால் சாதிக்கலாம். ஆனால், நல்ல பயிற்சி கள் இருந்தாலும் ஹெல்மட் அணியா மல், மது அருந்தி வாகனம் இயக்கி னால், எவ்வளவு பயிற்சி இருந்தாலும்,  அது பாதுகாப்பானது அல்ல. இதை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதற்காக இது போன்ற நிகழ்வு நடைபெறுகிறது. குறிப்பாக இளைஞர் களுக்கு இது போன்ற விழிப்புணர்வு அதிகம் ஏற்பட வேண்டும். ஹெல்மெட்  மற்றும் சீட்பெல்ட் அணிவது மிக முக் கியம். பெற்றோர்களும் பதினெட்டு வயது நிரம்பாதவர்களுக்கு வாகனங் கள் வாங்கி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இதை மீறி இதுபோன்ற பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளோர் வாகனங்கள் இயக்கினால் அவர்களது  பெற்றோர்கள் மீதும் போக்குவரத்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்ப டும் என எச்சரித்தார்.

;