districts

img

பூமியை நெருங்கும் பச்சை வால் நட்சத்திரம்

உடுமலை, பிப்.1- 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சூரியனை நோக்கி வரும் பச்சை நிற வால்  நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளி இராகல்பாவியில் நடை பெற்றது. வால்நட்சத்திரம் என்பது பனித்  துகள்கள் மற்றும் பாறைகளால் ஆனது. இந்த வால் நட்சத்திரம்  பிப்ரவரி 2ஆம் நாள் மிக அருகில்  வருவதால், நாம் வெறும் கண் களால் பார்க்க முடியும் . மேலும்  காலை 4 மணி முதல் 5 மணி வரை  நாம் கண்டு களிக்கலாம் என்பதை பள்ளி மாணவர்களுக்கு ஆசி ரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறி னார்.  இந்த வால் நட்சத்திரம் 50  ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்  பூமியை நெருங்குகிறது.  இதற்கு  முன்பு இந்த வால் நட்சத்திரம் வரு வதற்கு முன் நியாண்டர்தால் மனிதர்கள் பூமியில் வாழ்ந்தனர். மேலும் பூமியை ஒருமுறை சுற்றி  முடிக்கும் வரை நவீன மனிதர்கள் பரிணாம வளர்ச்சியடைந்தனர்.  அதனால்தான் இந்த வால் நட்சத்திரம் தனித்துவமானது என  பெரும்பாலானோர் கருது கின்றனர். வால் நட்சத்திரம் என்பது என்ன? சூரிய குடும்பத்தின் எச்சங் களில் இருந்து உருவானவை வால் நட்சத்திரங்கள் என்று அமெரிக்க விண்வெளி முகமை யான நாசா கூறுகிறது.  எளிதாகச் சொல்ல வேண்டு மென்றால், விண்ணில் உள்ள பாறைகள் மற்றும் ஐஸ் கட்டி களால் ஆன கோள வடிவிலானது தான் வால் நட்சத்திரம்.

வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனை நெருங்கும்போது அவற்றுக்கு வால் போன்ற பகுதி தோன்று கிறது. இது, வால் நட்சத்திரத்தில் உள்ள ஐஸ் கட்டி, சூரியனின் வெப்பத்தால் உருகுவதால் தோன்றுகிறது.   2020ஆம் ஆண்டில் வடக்கு  அரைக்கோளத்தின் பல பகுதி களில் காணப்பட்ட நியோவைஸ் வால் நட்சத்திரத்தை வெறும் கண் களால் பார்க்க முடிந்தது.  சில வால் நட்சத்திரங்கள் சூரி யனை ஒருமுறை சுற்றிவர குறுகிய  காலத்தை எடுத்துக்கொள்ளும். சில நட்சத்திரங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாகும். நீண்ட கால வரம்புடைய வால் நட்சத்தி ரங்கள் என இவை அழைக்கப் படுகின்றன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பெரும்பாலான ‘நீண்ட கால வால் நட்சத்திரங்கள்’ சூரியனில் இருந்து 306 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனி  மேகத்தில் உருவாகின்றன.பனிக்கட்டி துண்டுகளால் ஆன இத்தகைய பனி மேகம் (Oort Cloud), சூரியனைச் சுற்றி வரும்  ஒரு போர்வை அல்லது மேல் ஓடு  எனலாம்.  

C/2022 E3 (ZTF) எனும் இந்த  பச்சை நிற வால் நட்சத்திரமும்  பனி மேகத்தில் உருவாகியிருக் கலாம் என விஞ்ஞானிகளின் கூறு கின்றனர். இந்த வால் நட்சத்தி ரத்தை எங்கு காண்பது? எப்படி  காண்பது? பச்சை நிற வால் நட் சத்திரத்தை எங்கு காணலாம்? இந்த வால் நட்சத்திரம் மார்ச்  2022ஆம் ஆண்டில் கண்டறியப் பட்டது. அதாவது, இது வியாழன்  கோளுக்கு அருகில் செல்லும்  வரை இந்த வால் நட்சத்திரம்  மனிதர்களால் கண்டறியப்பட வில்லை. இந்த வால் நட்சத்திரத்திற்கு பச்சை நிறம் எப்படி வந்தது? இந்த  வால் நட்சத்திரம் அதிக டயட் டோமிக் கார்பனை (இரண்டு கார்பன் அணுக்களின் ஜோடி) கொண்டுள்ளது. இதனால் சூரிய னிலிருந்து வெளிப்படும் புற ஊதா  கதிர்களால் இந்த வால் நட்சத்திரம்  பச்சை நிறத்தில் ஒளிர்கிறது.  வரும் பிப்ரவரி 2ஆம் தேதி யன்று இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரும் என  விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிப்ரவர் 10-12க்கு இடையில் செவ் வாய் கோளை அடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, இந்த வால்  நட்சத்திரம் வடக்கு அரைக் கோளப் பகுதிகளில் தெரியும்.  ”இந்த வால் நட்சத்திரம் சுமார் 4.2  கோடி கிமீ தொலைவில் வரும்,  இந்தத் தொலைவு, சூரியனி லிருந்து புதன் கிரகத்தின் தொலைவுக்கு ஒத்ததாகும்,”  வால் நட்சத்திரத்தை எப் போது காணலாம்?  வடக்கு கீழ்வானத்தில் இரவு  10 மணிக்கு இந்த வால் நட்சத் திரம் எழும். பிப்ரவரி 2 அன்று பூமிக்கு அருகே வரும். பிப். 10- 12க்கு இடையில் புதன் கோளுக்கு  அருகே செல்லும். இதனை தொலைநோக்கி மூலம் இதைக்  காணலாம். ஆனாலும் தொலை வில் இருந்து இருட்டான பகுதி யிலிருந்து வெறும் கண்களாலும் காண முடியும். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்  கீழ் இயங்குகின்ற விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் சொசைட்டி இணைந்து  தமிழகம் முழுவதும் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.  அதன் அடிப்படையில் உடு மலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பாக தொலைநோக்கி மூலம் வால்நட்சத்திரத்தை படம்  பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.