அவிநாசி, அக்.7 – அவிநாசி ஒன்றியம், வஞ்சிபாளை யத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன், அருகாமை குடியிருப் புக்கு அணுகுசாலையுடன் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போ ராட்டம் நடத்துவதென அப்பகுதி மக் கள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வஞ்சிபாளையத்தை அடுத்து கணியாம்பூண்டி ஊராட் சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில், புதி தாக பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பாலத்தின் அருகில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. இப் பகுதியை சேர்ந்த மக்களின் போக்கு வரத்துக்கு போதிய வழித்தடம் இல் லாமல் ஏற்கனவே சிரமப்பட்டு வரு கின்றனர். இந்த நிலையில் புதிதாகக் கட்டப்படும் பாலம் இக்குடியிருப்பு மக்களின் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் மிகவும் உயர மாக கட்டப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதிப்படைவார்கள்.
மேலும் அமைக்கப்படுகிற பாலத்தில் மழை நீர் வடிகால் இல்லாத நிலையில், அரு கில் உள்ள ரயில்வே இடத்தில் தேங் கும் நிலையும் உள்ளது. இது இப்ப குதி மக்களின் இயல்பான வாழ்க் கையை முடக்கக்கூடியதாக உள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி மாவட்ட நிர் வாகத்திடம், அணுகுசாலை, அடிப் படை வசதிகளுடன் பாலம் கட்டுமா னப் பணியை மேற்கொள்ள வேண் டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தார். அத்து டன் அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்திலும் இக்கோரிக்கையை வலியுறுத்தினார். இருப்பினும் கோரிக்கைக்கு செவி மடுக்காமல், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் தொடர்ந்து இப்பணியைச் செய்து வருகிறது. இதைக் கண்டித்தும், அருகாமை குடியிருப்புக்கு பாதை வசதியை உறு திப்படுத்தவும் வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்ப குதி மக்களைத் திரட்டி அண்மையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதபடி பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். எனினும் பாலம் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் அணு குசாலை, அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்துவது குறித்து எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதன் கார ணமாக பொது மக்கள் கோரிக்கைக ளுக்கு செவி மடுக்காமல் அலட்சிய மாக செயல்படும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து அப்பகுதி யைச் சேர்ந்த பொது மக்கள் அக்டோ பர் 17ஆம் தேதி வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட போவ தாக அறிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பிரச்சனையில் உரிய தீர்வு காண ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொது மக்கள் வலி யுறுத்தி உள்ளனர்.