districts

குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தம்பதியை 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை!

கோவை, ஜூன் 15- சூலூர் அருகே பீகாரில் இருந்து குழந்தை களை கடத்தி விற்பனை செய்த விவகாரத்தில் பீகார் மாநில தம்பதியை போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்ப நாயக்கன்பட்டியில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக அங்கு உணவு விடுதி நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி, அவரது கணவர் மகேஷ் குமார், தாயார் பூனம்தேவி, தங்கை மேகா குமாரி ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.

இவர்களிடம் குழந்தையை வாங் கிய விவசாயி விஜயன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.  விஜயனிடம் இருந்து பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை மீட்கப்பட்டது. பீகார் மாநில தம்பதியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராம்பாபு என்பவருக்கு ஆண் குழந்தை ஒன்றை விற்பனை செய்தி ருப்பதும் தெரிய வந்தது.

ஆந்திர ஓட்டு நர் ராம்பாபு அடிக்கடி ஆந்திராவில் இருந்து சூலூர் அருகே உள்ள தொழிற்சாலைக்கு பொருட்களை ஏற்றி வந்த நிலையில், பீகார் மாநில குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்பட்டு, அவர்களிடம் குழந்தையை வாங்கி யிருப்பதும் தெரிய வந்துள்ளது.  இதனையடுத்து, விற்பனை செய்யப் பட்ட ஆண் குழந்தையை தனிப்படை அமைத்து மீட்ட போலீசார் லாரி ஓட்டுநர் ராம் பாபுவை கைது செய்துள்ளனர். இரு குழந்தைகளை சைல்ட் லைன் அமைப் பின் மூலம் போலீசார் பராமரித்து வருகின்ற னர்.

 இதனிடையே, பீகார் மாநில தம்பதி அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் ஆகியோர் வேறு யாருக்கும் இதே போல குழந்தைகளை விற்பனை செய்திருக்கிறார்களா என்பது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரையும் காவலில் எடுக்க கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 5 நாட்கள் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை பரிசீலித்த நீதிபதி பீகார் மாநில தம்பதியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.  

இதையடுத்து, கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டிருந்த பீகார் மாநில தம்பதியை கருமத்தம்பட்டி போலீசார் காவ லில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு யாருக்கும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் இந்த குழந்தைகள் விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்த தகவல்கள் விசாரணையில் தெரிய வரும் என போலீசார் தெரிவித் துள்ளனர்.