கோவை, ஜூன் 1- மருதமலை வனப் பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட காட்டு யானை, மருத்துவ குழு வினர் தீவிரம் சிகிச்சையால் தானாக உணவு உட்கொண்டது. கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருத மலை அடிவார சரக பகுதியில் வியாழனன்று வனத்துறை பணியாளர்கள் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது, அப்ப குதியில் பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப் பதை கண்டு, உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை மருத்து வர்கள் குழுவினருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அங்கு வந்த மாவட்ட வன கால்நடை மருத்துவ குழுவினர் யானை நிற்க முடியா மல் படுத்து இருந்த நிலையில், ஊட்டச் சத்து மருந் துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை செலுத்தப் பட்டு கிரேன் உதவியுடன் யானையை தூக்கி நிறுத் திய போது அதன் முன் னங் கால் கள் நிற்க முடியாமல் இருந்தது. வெள்ளியன்று முதல் தொடர் தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததால் சனியன்று தானாக உணவை உட்கொள்ள துவங்கி உள்ளது.