districts

img

500 கிலோ வெல்லம் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

தருமபுரி, ஜன.4- தருமபுரியில் விதிகளை மீறி தயாரிக்கப்பட்டதாக சுமார் 500 கிலோ வெல்லத்தை மாவட்ட உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் பறி முதல் செய்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில், பொங் கல் பண்டிகை கால வெல்லம் தயா ரிப்பு மற்றும் விற்பனை செய்வது கலப்படமின்றி தயாரிக்கப்படுவதை கண்காணிக்கவும் மற்றும் விதிமுறை கள் மீறல் கண்டறியப்பட்டால் உரிய உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் பயன் படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தர விட்டுள்ளார். அதன்பேரில் தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஏ.பானு சுஜாதா தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு நிய மிக்கப்பட்டுள்ளது. இக்குழு தரும புரி, கடகத்துார், முத்துகவுண்டன் கொட்டாய், பசுமை நகர் மற்றும் பாப்பாரப்பட்டியில் உள்ள வேலம் பட்டி, பனந்தோப்பு, தட்டாரப்பட்டி, பாலக்கோடு, காவாப்பட்டி பகுதி களில் உள்ள வெல்லம் மற்றும் நாட்டு  சர்க்கரை தயாரிப்பு கரும்பாலை களில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர். இதனிடையே, பொங்கல் பண் டிகை காலம் நெருங்கி வரும் நிலை யில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள  கரும்பாலைகளில் வெல்லம் உற் பத்தியாளர்கள் ஆலைகளில் நாட்டு வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தயாரிப்பு பணியை தீவிரப்படுத்த துவங்கியுள்ளனர். மேலும், வெல்லத் தில் வெளிர் நிறமாக இருக்க சர்க் கரை, மைதா, ரசாயன (வேதி பொருட் கள்) மற்றும் செயற்கை நிறமிகள் போன்றவைகள் கலந்து தயாரிக்கப் படுகின்றனவா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பென்னாகரம் ஒன்றியத் திற்குட்பட்ட பாப்பாரப்பட்டி பகுதி மற்றும் பாலக்கோடு ஒன்றியம், காவாப்பட்டி, சித்திரப்பட்டி பகுதி களில் உள்ள 25க்கும் மேற்பட்ட ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்ட தில் 3 ஆலைகளில் வெல்லம் தயா ரிப்பில் சந்தேகத்திற்கிடமான வகை யில், வெல்லத்தில் சர்க்கரை, செயற்கை நிறமிகள் கலந்திருக்க லாமோ? என்ற சந்தேகத்தின் அடிப் படையில் 500 கிலோ அளவிலான வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப் பட்ட வெல்லங்கள் இரண்டு அறை களில் பூட்டி வைக்கப்பட்டு, உணவு மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக் கப்பட்டது. இதன்பின் கிடைக்கப் படும் ஆய்வு அறிக்கை அடிப்படை யில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அதிகாரிகள் தெரிவித்த னர். மேலும், ஒரு கரும்பாலையில் சோடியம் ஹைட்ரோசல்பேட் ரசாய னம் 25 கிலோ அளவிலானது பிளாஸ் டிக் கன்டெயினர் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கரும்பாலையில் இருந்த வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டு, வெல்லம்  மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பபட் டது. அந்த ஆலையில் தயாரித்த வெல்லத்தில் நிறமிகள் கலக்கப்பட் டது உறுதி செய்யப்படுமானால், அந்த ஆலை உரிமையாளர்கள் மீது  உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.