districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தருமபுரி வனக்கோட்டத்தில் 5 கி.மீ அகழிகள்

தருமபுரி, ஏப்.8- யானைகள் காப்புக்காட்டில் இருந்து வெளியேறி கிராமப் புறங்களில் நுழைவதை தடுக்க தருமபுரி வனக்கோட்டத்தில் 5 கி.மீட்டர் அளவில் புதிதாக யானை தாண்டா அகழிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தருமபுரி மாவட்ட வன அலுவலர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி வன கோட்டத்திற்குட்பட்ட காப்புக்காடுகளில் அதிகளவில் காணப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முனி முள் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு, உள்ளூர் இன மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. யானைகள் காப்புக்காட்டில் இருந்து வெளியேறி கிராமப்புறங்களில் ஊடுருவதை தடுக்கும் வகையில் புதிய யானை தாண்டா அகழிகள் 5  கி.மீட்டர் அளவில் அமைக்கவும், ஏற்கனவே உள்ள யானை  தாண்டா அகழிகளை பராமரிக்கவும் ரூ.39 லட்சம் செலவில்  பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரம் குன்றிய, காடு களின் அடர்த்தியை அதிகப்படுத்தவும், வனவிலங்குகளின் உணவு தேவைகளை பூர்த்தி செய்யவும், நபார்டு திட்டத்தின்  கீழ் ரூ.76 லட்சத்து 64 ஆயிரம் செலவில் நாற்றங்காலில் 5  லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. காப்புக்காடுகளிலிருந்து வெளியே வரும் யானைகளை கண்காணித்து மீண்டும் காட்டுக்குள் விரட்டுவதற்கு யானை தடுப்பு காவலர்கள் மற்றும் சிறப்பு இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மனித - விலங்குகள் மோதலை தடுக்க வனப்பகுதியை  ஒட்டியுள்ள கிராமங்களில் வன பணியாளர்கள் மற்றும்  கிராம வன குழுக்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் உணவுக்காகவும், குடிநீர் தேவைக்காகவும், காட்டு யானைகள் காப்புக்காட்டிலிருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில், வனப்பகுதிக்குள் சூரிய மின்சக்தி யால் இயங்கும் மின்மோட்டார் வசதி கொண்ட ஆழ்துளை  கிணறுகள் மூலம் குடிநீர் தொட்டி அமைத்து வனவிலங்கு களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. வனவிலங்குகளுக்கு கசிவுநீர் குட்டை, தடுப்பணை, நீர்  துளைகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே உள்ளவற்றை பராமரித்து வனவிலங்குகளின் குடிநீர் தேவை  பூர்த்தி செய்யப்படுகிறது. ரூ.2 கோடியில் மேற்கண்ட  பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

புன்செய் புளியம்பட்டியில்  காலவரையற்ற குடியேறும் போராட்டம் அறிவிப்பு 

ஈரோடு, ஏப்.8- புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் வாரச்சந்தையில் செயல்பட்டு வந்த மாட்டி றைச்சி கடைகளை அகற்றி தடை செய்து உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து அறிவித்த காலவ ரையற்ற குடியேறும் போராட்டம் திட்டமிட்ட படி செவ்வாயன்று நடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி  சந்தையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக  செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடைகள் எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் இடித்து  அகற்றப்பட்டது. இதனை கண்டித்து தொடர்  போராட்டத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வருகிறது.  இதன்ஒருபகுதியாக, மாட்டிறைச்சி விற்ப னைக்கு வழிவிட வேண்டும் என வலியுறுத்தி  வரும் செவ்வாயன்று குடியேறும் போராட் டம் அறிவிக்கப்பட்டது. இதில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில உதவி தலைவர் யு.கே.சிவஞானம் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.  இந்நிலையில், சனியன்று நகராட்சி ஆணையாளர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இப்பேச்சுவார்த்தைக்கு தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. ஆனால் அவர்கள்  கலந்து கொள்ளவில்லை. வருவாய் ஆய் வாளர் கலந்து கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், மூத்த தோழர் கே.துரைராஜ், செயற் குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர்  பி.பி.பழனிசாமி, செயலாளர் அண்ணா துரை, பவானிசாகர் கமிட்டியின் தலைவர் ஏ.பி.ராஜு, செயலாளர் ஜெகநாதன், சிபிஎம்  ஒன்றியக்குழு செயலாளர் டி.சுப்பிரமணி, பி.என்.ராஜேந்திரன் மற்றும் மாட்டிறைச்சி வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த பேச்சுவார்த்தையில், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை ஒத்திவைக்கலாமே என ஆணையர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பிரச்ச னைக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட் டத்தை ஒத்திவைக்க முடியாது என போராட் டக்குழுவினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரி வித்தனர்.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:40.99/60அடி நீர்வரத்து:569கன அடி
வெளியேற்றம்:1124கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்:54.60/90அடி.நீர்வரத்து:122கனஅடிவெளியேற்றம்:15கன அடி

லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

திருப்பூர், ஏப்.8- கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை லாரி கள் மூலம் எடுத்து விற்பனை செய்வதாக கூறி  விவசாயிகள் 2 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுக்கம்பாளையம் கல்குவாரியிலிருந்து தண்ணீர் எடுக்க சென்ற 2 லாரிகளை வெள்ளி யன்று அப்பகுதி மக்கள் பற்றும் விவசாயிகள்  சிறைபிடித்தனர். பல்லடம் அருகே உள்ள சுக் கம்பாளையம் பகுதியில் கல்குவாரி உள் ளது. இதில் உள்ள தண்ணீரை, கல்குவாரி லாரி கள் மூலம் எடுத்துச் சென்று கோடங்கிபாளை யம் பகுதியில் உள்ள கல்குவாரி சாலைக ளில் ஊற்றுவதாக கூறப்படுகிறது. அந்த  சாலைகளில் கல்குவாரி லாரிகள் செல்லும் போது புழுதி பறக்காமல் இருப்பதற்காக இதை செய்வதாக லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் மற்றும் வருவாய்த்துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். லாரி கள் மூலம் தண்ணீர் விற்பனை நடைபெறு வதாகவும், இதனால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு, இங்குள்ள விவசாய கிண றுகள் வற்றி விடுவதாக விவசாயிகள் குற்றம்  சாட்டினர். இதையடுத்து வரும் 10 ஆம் தேதி  வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என வரு வாய் துறையினர் தெரிவித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

ஆசிரியர் - மாணவர்கள்  மோதலை தடுக்க விழிப்புணர்வு

 தருமபுரி, ஏப். 8- ஆசிரியர்-மாணவர்கள் மோதலை தடுக்கும் வகையில்  விழிப்புணர்வு பாடல் எழுதி, பாடிய அரசு பள்ளி ஆசிரியர்,  இசையமைத்த அரசு பள்ளி மாணவனின் பாடல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக ஆசிரியர், மாணவர்களிடையே விரும் பத்தாகத சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆங்காங்கே ஓரிரு சம்பவங்கள் நடைபெற்றாலும், தற்போது உள்ள சமூக ஊடகத்தின் வாயிலாக அது கடைக்கோடி கிராமத் திற்கும் சென்று சேர்கிறது. இதனால், பல இடங்களில் இத் தகைய மோதல்கள் நடைபெறுவதாக பொது புத்தியில் புகுத்தப்படுகிறது.  இந்நிலையில், ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே மோதல்கள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்துகின்ற வகையில் தருமபுரி மாவட்டம், கண்ணிப் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆங்கில  பட்டதாரி ஆசிரியர் சீனிவாசன் என்பவர் மாணவர் களுக்கான விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார்.  இந்தப் பாடலுக்கு அரசு அவ்வை மேல்நிலைப் பள்ளி யில் படித்து வரும், ஆசிரியர் மகன் ஶ்ரீநேஷ், இசையமைத் துள்ளார். அப்பா, மகன் இருவரும் சேர்ந்து உருவாக்கியுள்ள  இந்த பாடல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதி விட்டுள்ளனர். “ஏற்றி வைத்த ஏணிப்படியை, ஏன் இப்படி  எட்டி உதைக்கிறாய்” என தொடங்கும் இந்த விழிப்புணர்வு  பாடலில் ஆசிரியர் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்கள்  குறித்த புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல்  சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு வார காலத்தில்  15,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து, நல்ல வர வேற்பு பெற்றுள்ளது. 

மஞ்சள் ரூ. 1.86  கோடிக்கு விற்பனை

சேலம், ஏப்.8- ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை  உற்பத்தியா ளர்கள்  கூட்டுறவு  விற்பனை    சங்கத்தில் 4600 மஞ்சள் மூட்டைகள் ரூ1.86 கோடிக்கு   விற்பனை செய்யப்பட்டது.  சேலம்  மாவட்டம்,  ஆத் தூரில்  செயல்பட்டு  வரும்   வேளாண்மை உற்பத்தியா ளர்கள்  கூட்டுறவு  விற்பனை   சங்கத்தில் மஞ்சள் ஏலம்   நடைபெற்று  வருகிறது. இங்கு ஆத்தூர் மட்டுமின்றி  பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,  திட்டக்குடி உள்ளிட்ட பகுதி களை  சேர்ந்த  விவசாயிகள்  மஞ்சள் மூட்டைகளை  விற் பனைக்காக இங்கு கொண்டு   வருகிறார்கள். இந்த  மஞ்சள்  மூட்டை களை  சேலம், ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட  மாவட்டங்களை  சேர்ந்த மஞ்சள் வியாபாரிகள்  இங்கு  வந்து  மறைமுக  ஏலத்தில்  கலந்து  கொண்டு  மஞ்சள் மூட்டைகளை  கொள் முதல்  செய்து  செல்கிறார் கள். இதன்ஒருபகுதியாக, ஆத்தூர்  வேளாண்மை   உற் பத்தியாளர்கள்  கூட்டுறவு  விற்பனை  சங்கத்தில் நடை பெற்ற  மஞ்சள்  ஏலத்தில்   விவசாயிகள் கொண்டு வந்த  4600 மஞ்சள் மூட்டைகள்  சுமார் ரூ 1.86 கோடிக்கு விற் பனை  செய்யப் பட்டுள்ளது.  இதில், விராலி ரகம்  மஞ்சள் (குவிண்டால்)) 4,199 முதல் 8,623 ரூபாய்க்கும்,  உருண்டை ரகம் மஞ்சள் (குவிண்டால்)) 4,012 ரூபாய்  முதல்  6,293 ரூபாய்க்கும், பனங்காளி  தாய் மஞ்சள் (குவிண்டால்))  7,569 ரூபாய்  முதல்  13,000 ரூபாய்  வரை   மறைமுக  ஏலத்தில்  கலந்து   கொண்ட வியாபாரிகள்  மஞ்சள் மூட்டைகளை  கொள் முதல் செய்தனர்.

மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் குற்றவாளிகளை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

சேலம், ஏப்.8- ஏற்காட்டில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் சித்திரவதை செய்தவர்களை கைது செய்ய   மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  சேலம் மாவட்டம், ஏற்காடு  தாலுகா,  நாகலூர் ஊராட்சிக்குட்பட்ட 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஏப்.7 தேதியன்று இரவு  9 மணியளவில்  வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், சித்தையன் ஆகியோர் சிறுமியை திடீரென வாயில் துணியை வைத்து  இருசக்கர வாகனத்தில் கடத்தி அடர்ந்த வனப் பகுதிக்கு சென்று,  அந்த மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளனர். பின்னர், இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, அந்த வழியாக வந்த ஒருவரின் உதவியோடு மாணவி வீடு திரும்பியுள்ளார். தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை  சந்தித்து விசாரிக்க பெற்றோர்கள் சென்றுள்ளனர். அப்போது, சித்தையன் என்பவர், அரிவாளை எடுத்து மாணவி தந்தையின் தலையில் வெட்டி உள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவியின் தந்தையை ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார், சேலம் - கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், சக்திவேலை கைது செய்துள்ளது. முக்கிய குற்றவாளியான சித்தையன் தலைமறைவாகியுள்ளார்.  இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், ஐ.ஞானசௌந்தரி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளை நேரில் சென்று குற்றவாளிகளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.  மேலும், இன்னொரு முக்கிய குற்றவாளி சித்தய்யனை விரைவில் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக சட்டரீதியான பாதுகாப்பையும், அரசு நிவாரணமும் தரப்பட வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து ஏற்காடு மலைப்பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகிறது. பாதிக்கப்படுகிற பெண்களோ சம்பந்தப்பட்ட பொதுமக்களோ புகார் தருவதற்கு கூட மகளிர் காவல் நிலையம் ஏற்காடு தாலுகாவில் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் ஏற்காடு மலை கிராமங்களில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட வேண்டிய ஒரு கொடூரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.  எனவே, தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொண்டு ஏற்காடு தாலுகாவில் மகளிர் காவல் நிலையத்தை துவங்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 294b, 323,324,366,506(2) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தாலுகா செயலாளர் நேரு மற்றும் கிருஷ்ணமூர்த்தி, நவீன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். 

மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக 5 அலுவலர்கள் பணியிடை நீக்கம்

உதகை, ஏப்.8- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித  தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக கல்வித்துறை அலுவலர்கள் 5  பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள் ளனர். தமிழ்நாட்டில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம்தேதி தொடங்கி 3 ஆம்தேதி வரையும், பிளஸ்-1  பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14 ஆம் தேதி  தொடங்கி 4 ஆம் தேதி வரை நடைபெற்றது.  இதில் 7440 மாணவர்கள் எழுத விண்ணப் பித்து இருந்தனர். மேலும், பொதுத்தேர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்க, மேல்நிலைத் தேர்வுக்காக 44 முதன்மை கண் காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 86 அலுவலக பணியாளர்கள், 574 அறை  கண்காணிப்பாளர்கள், 14 வினாத்தாள் வழித் தட அலுவலர்கள் என 761 ஆசிரியர்கள் இந்த  பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் முறைகேடுகள் ஈடுபடுவது தவிர்க்க 69 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம், மஞ்சூர்  அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளி யில் கடந்த 27 ஆம்தேதி நடந்த கணித தேர்வில்  மாணவ மாணவிகள் ஒரு சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை  எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, நீலகிரி மாவட்ட முதன்மை  கல்வி அலுவலர் முனியசாமி தலைமை யிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி  சென்னை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி  வைத்தனர். விசாரணையில் தேர்வில் விடை எழுத மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அறை கண்காணிப் பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி,  முதன்மை கண்காணிப்பாளராக பணி யாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலு வலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5  பேர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப் பட்டு உள்ளனர். இந்த சம்பவம் கல்வித் துறை  வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.

சிறுமிக்கு பிரசவம் - மருத்துவர் கைது

சேலம், ஏப்.8- சேலம், வாழப்பாடி யில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட 17 வயது இளம் பெண் ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் செல்வாம்பாள் ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.  மருத்துவர் செல்வம் பாள் ராஜ்குமார் கருவில் இருக்கும் குழந்தையை ஆணா? பெண்ணா? என்று  சொல்வதற்கு பணம் வாங்கிக் கொண்டு தகவல்  சொல்லியதற்காக, இவரது ஸ்கேன் சென்டர் மற்றும் மருத்துவமனை  ஏற்கனவே சீல் வைக்கப் பட்டு ஏற்கனவே கைது  செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

நீட் தேர்வு விலக்கு கேட்பவர்கள் சமூக விரோதிகளா?
ஊடகவியலாளர்கள் கிடுக்குப்பிடி - ஓட்டம் எடுத்த என்சிபிசிஆர் உறுப்பினர்

கோவை, ஏப். 8- நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பவர்கள் சமூக விரோதிகள் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சர்ச் சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள் ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைய டுத்து ஊடகவியலாளர்கள், அடுத்தடுத்து கேள்விகளை தொடுத்தபோது, ஆளை விட் டால் போதும் என அலறியடித்து ஓடினார். தமிழ்நாட்டில், நீட் தேர்வு அறிமுகப்ப டுத்தப்பட்ட நாள் முதல் இப்போது வரை  கிரா மப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத் துவக் கனவை காவு வாங்கிக்கொண்டிருக்கி றது.  அரியலூர் மாணவி அனிதா தொடங்கி நீட்  தேர்வு பலி வாங்கிய மாணவர்களின் பட்டியல்  இன்றுவரையில் நீள்கிறது. நீட் தேர்வு அறிமு கப்படுத்தப்பட்ட போதிலிருந்தே ஒட்டு மொத்த தமிழ்நாடு இந்த தேர்வுக்கு எதிரா கவே குரல் கொடுத்து வருகிறது. இந்நிலை யில், தமிழ்நாடு அரசு 3 முறை சட்டமன்றத் தில் நீட்  தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவை தாக்கல் செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளு நருக்கு அனுப்பி இருக்கிறது. இதில், பாஜக வை தவிர கட்சி பேதமில்லாமல் மாண வர்களின் நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு அனைத்து கட்சியினரும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து நீட் தேர் வுக்கு தமிழகத்தில் இருந்து விலக்கு அளிக்க  வேண்டும்

என்கிற போராட்டத்தை தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் அண்மை யில், கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு மேற் கொண்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் செய்தி யாளர்களிடம் பேசும் போது நீட் தேர்வை எதிர் ப்பவர்கள் சமூக விரோதிகள் என்ற தொனி யில் பேசினார். இதுகுறித்து ஊடகவிய லாளர்கள் அழுத்தமான கேள்விகளை முன் வைத்தபோது, திணறிய ஆனந்த், நான் சமூக வலைத்தளங்களை சொன்னேன் என மழுப்ப  முயன்றார். திரும்பவும் நிருபர்கள் கிடுக்கிப் பிடி போட, நான் தமிழகத்தில் ஊடகவிய லாளர்களையே சந்திக்க மாட்டேன் என ஓட்டம் பிடித்தார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறை யாண்மை மிக்க ஒரு மாநிலத்தின் அரசு நீட்  தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றிய சட்டமன்ற உறுப் பினர்களை, மக்களின் பிரதிநிதிகளை சமூக  விரோதிகள் என்று ஆனந்த் குறிப்பி டுகிறாரா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணை யம் போன்ற பொறுப்பு மிக்க அமைப்பில் இருக் கும் ஆனந்த் போன்ற சனாதன சிந்தனை யாளரின் நச்சு கருத்துக்கள் கண்டிக்க தக் கவை,  நீட் தேர்வு எத்தகைய ஆபத்தை விளை விக்கிறது,

மாணவர்களுக்கு எப்படியெல் லாம் மன உளைச்சளை ஏற்படுத்துகிறது. கட் டணம் என்கிற பெயரில் தனியார் நீட் தேர்வு  பயிற்சி மையங்கள் அடிக்கும் கொள்ளை, ஏழைஎளிய கிராமத்து மாணவர்கள் எவ்வாறு மருத்துவர் கனவை காவு கொடுக்கிறார்கள் என் பது குறித்து அனைத்து தரப்பு கருத்துக ளையும் கேட்க ஓய்வுபெற்ற நீதிப தியை கொண்டு ஒரு குழு அமைக்கப்பட் டது. அக்குழு தமிழ்நாடு முழுவதும் மாணவர் கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல்  கட்சிகள், மாணவர் சங்கங்கள், சமூக அமைப் புகள் என அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்டு, அதனை தொகுத்து அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்ப டையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு பொருந் தாது என்றும், விலக்கு அளிக்க வேண்டும்  என்கிற மசோதாவை தமிழக சட்டமன்றத் தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுந ருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழகமே நீட் தேர்விற்கு எதிராக இருக் கும் நிலையில், என்சிபிசிஆர் ஆணையத் தின் உறுப்பினர் இதுகுறித்த எந்த தரவுக ளையும் ஆராயாமல், நீட் தேர்வை எதிர்ப்ப வர்கள் சமூக விரோதிகள் என போகிற போக் கில் பேசிக்கொண்டு செல்வது கடும் கண்ட னத்திற்கு உரியது. ஒன்றியத்தின் பிரதிநிதி களாக தமிழகம் வருகிறவர்கள் பெரும் பாலும் மூளையில் களிமண்ணை நிரப்பி வரு வதாகவும் சமூக செயற்பட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.