districts

36 வது தேசிய புத்தக கண்காட்சி

கோவை, டிச. 29– கோவை நேரு ஸ்டேடியத்தில் 36வது தேசிய புத்தகக் கண்காட்சி டிச.28ஆம் தேதி முதல் ஜன.3 ஆம் தேதி  வரை நடைபெறவுள்ளது. நியு செஞ்சுரி புக் ஹவுஸ், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார் பில் 36 வது தேசிய புத்தக கண்காட்சியை கோவை நேரு ஸ்டேடியத்தில் வரும் டிச.28 ஆம் தேதி முதல் ஜன.3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், இலக்கியங்களில் துவங்கி மார்க்ஸ் ஏங்கல்ஸ் தேர்வு நூல்கள் வரை பல்வேறு நூல்கள் இடம்பெறவுள்ளன. அதோடு தமிழ் வளர்ச்சித் துறை யின் சிறந்த நூல்களுக்கான விருது பெற்ற பல்வேறு நூல்க ளும் இதில் அடங்கும். கோவை நியூ செஞ்சுரி புத்தக நிறு வனம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 10 சதம் முதல் 50 சதம் வரை சிறப்பு சலுகையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;