districts

அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாமுக்கு உள்ளாட்சி பணம் ரூ.36.5 லட்சம் : மக்கள் பிரதிநிதிகள் அதிருப்தி

திருப்பூர், செப். 21 – திருமுருகன் பூண்டி டீ பப்ளிக் பள்ளி யில் நடத்தப்படும் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாமுக்கு திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து ரூ.36.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு ஒன்றிய அரசு  ஒதுக்கி இருக்கும் நிதியில் இருந்து இதற்குச்  செலவிடாமல், மக்களுக்கு செய்ய வேண் டிய வளர்ச்சிப் பணிகளுக்கே பணமில்லாமல் தவித்து வரும் உள்ளாட்சிகளின் பணத்தை திருப்பி விட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்று உள்ளாட்சிகளின் மக்கள்  பிரதிநிதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

அக்னிபத் ஆள்சேர்ப்பு முகாம்

திருமுருகன் பூண்டி டீ பப்ளிக் பள்ளியில்  செப்டம்பர் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் அக்டோபர் 1ஆம் தேதி முடிய அக்னி பத் ஆள் சேர்ப்பு முகாம் நடத்துவதாக அறி விக்கப்பட்டுள்ளது. இம்முகாமை நடத்த நிதி  ஆதாரம் இல்லாததால் நிதி ஒதுக்கித் தரும் படி கோவை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் இயக்குநர் கடந்த ஜூன் 24ஆம் தேதி மாவட்ட  ஆட்சியருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஆள் சேர்ப்பு முகாமுக்கு தடுப்பரண், மின்  விளக்கு, பந்தல், கணினி, தற்காலிக கழிப் பறை, மருத்துவ வசதி, வாகன வசதி மற்றும்  பாதுகாப்பு உள்ளிட்ட தேவையான வசதி களை செய்து கொடுக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்ளாட்சிகளுக்கு கடிதம்

இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட் டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி மற்றும்  நகராட்சிகள், பேரூராட்சிகள் நிதி வழங்கும் படி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட உள் ளாட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி திருப்பூர் மாநகராட்சி ரூ.12 லட் சம், பூண்டி, தாராபுரம், காங்கேயம், வெள்ள கோவில், உடுமலை, பல்லடம் நகராட்சிகள் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.18 லட்சம், அவிநாசி,  மடத்துக்குளம், கொமரலிங்கம், சாமாளாபு ரம், தளி, குன்னத்தூர், குளத்துப்பாளையம், மூலனூர், ஊத்துக்குளி, முத்தூர், ருத்ராவதி ஆகிய 11 பேரூராட்சிகள் தலா ரூ.50 ஆயிரம்  வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் கணி யூர், சங்கராமநல்லூர், கன்னிவாடி, சின்னக் காம்பாளையம் பேரூராட்சிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் ஆக மொத்தம் ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் இந்த தொகையை செலுத்திவிடவும் உத்தரவிடப்பட்டதால் அனைத்து உள்ளாட்சிகளும் தங்கள் பற்றாக்குறையான நிலையிலும் வேறு வழி யின்றி இந்த தொகையைச் செலுத்தி இருக் கின்றனர் என்று உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரி வித்தனர்.

ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்?

ஒன்றிய அரசு தனது வருடாந்திர பட்ஜெட் டில், ராணுவத்துக்கு அதிகபட்சமாக நிதி  ஒதுக்கீடு செய்கிறது. அக்னிபத் திட்டத்திற்கு  அந்த ஒதுக்கீட்டில் இருந்து பணம் செலுத்துவ தற்கு மாறாக மாநில அரசுகளின் கீழ் உள்ள  உள்ளாட்சி அமைப்புகளிடம் பணத்தைப்  பெறுவது ஏன் என்று அவர்கள் கேள்வி  எழுப்பினர். அதுவும் உள்ளாட்சிகளில் குடி நீர், சாலை, மின் விளக்கு, திடக்கழிவு மேலாண்மை என அடிப்படை பிரச்சனை களுக்கு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள் ளனர். நிதி இல்லாததால் மக்களின் தேவையை நிறைவேற்ற முடியாமல் பரித விக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் பல் வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி  ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக அம லாக்கும் ஒரு திட்டத்துக்கு இந்த நிதியை பறிப் பதும் ஒரு வகையில் சர்வாதிகார நடவ டிக்கைதான் என்று கவுன்சிலர்கள் கூறினர்.

கடும் அதிருப்தி

ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநில அரசுகளுக்குத் தர வேண்டிய பங்குத்  தொகையையும் தராமல் ஒன்றிய அரசு இழுத் தடிக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இப்போது  உள்ளாட்சிகளின் நிதி அதிகாரத்தில் இந்த  தலையீடு என்பது ஜனநாயக விரோதமானது,  சர்வாதிகாரமானது என்று குற்றஞ்சாட்டினர்.  ஏற்கெனவே இது குறித்து திருமுருகன் பூண்டி நகர்மன்ற கூட்டத்தில் நிதி ஒதுக்க மன்றப்  பொருள் வைக்கப்பட்டபோதே திமுக, மார்க் சிஸ்ட் நகர்மன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும்  ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும் இது அர சின் உத்தரவு என்பதால் நாம் நிறுத்த முடியாது  என்று நகராட்சி ஆணையர் அப்போதே பதில்  அளித்தார். பூண்டி நகராட்சி நிதி மட்டும்தான்  ஒதுக்கப்பட்டது என்று நினைத்தால் திருப்பூர்  மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட் சிகளிலும் நிதி வசூலித்திருக்கின்றனர். ஒன் றிய அரசு மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் ஒதுக்குவதற்கு மாறாக, கொஞ்சம் இருக்கும் பணத்தையும் அபகரிக்கும் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரி யது என்றும் மக்கள் பிரதிநிதிகள் குமுற லுடன் தெரிவித்தனர்.



 

;