சேலம், ஜூன் 13- சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஆய்வுக்குட்படுத்தாத 305 தனியார் பள்ளி வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10 ஆம் தேதி பள்ளி கள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்ப தற்கு முன்பே தனியார் பள்ளி வாக னங்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் படி, சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங்களில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டன.
இந்த ஆய்வில், பள்ளி வாக னங்களில் குறிப்பிட்ட இடத்தில் கண்கா ணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? மாணவர்கள் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் உறுதியான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா? சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சேலம், தருமபுரி மாவட்டங்களில் 3,705 தனியார் பள்ளி வாகனங்களில், 2,900 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத் தப்பட்டன. ஆய்வுக்கு உட்படுத்தாத 305 பள்ளி வாகனங்கள், ஆய்வுக்குப் பிறகே இயக்க அனுமதிக்கப்படும்.
ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதி காரிகள் கூறுகையில், தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி முடிந்து, அதன் அறிக்கை சென்னை யில் உள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.
ஆய்வுக்குட்படுத்தாத 305 தனி யார் பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங் களை ஆய்வுசெய்த பிறகே பள்ளி நிர்வா கம் இயக்க வேண்டும். குறைபாடு கண் டறியப்பட்ட பள்ளி வாகனங்கள், குறை பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும். அதன்பிறகே அந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும், என்ற னர்.