districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மனநல பாதித்த சிறுவன் மீது தாக்குதல் காப்பக ஊழியர்கள் 3 பேர் கைது

சேலம், ஜூலை 13- சேலத்தில் உள்ள மனநல காப்பகத்தில் 9 வயது சிறுவனை  கம்பால் அடித்து சித்ரவதை செய்த ஊழியர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பூசாரி  பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவர் சேலம் அழகா புரம் எல்ஐசி காலனியில் மன வளர்ச்சி குன்றியவர்களுக் காக காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு 9 வயது சிறுவன்  பராமரிக்கப்பட்டு வருகிறார். கடந்து 5ஆம் தேதியன்று சிறுவனின் உடலில் ரத்த காயங்கள் இருந்தது. இது குறித்து  அவரது தாய் காப்பகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். சிறுவன் விளையாடிய போது கீழே விழுந்து காயமடைந் ததாக காப்பக நிர்வாகிகள் கூறினர்.  இதில் சந்தேகமடைந்த சிறுவனின் தாய் காப்பகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில்,  பயிற்சி நிலைய பிசியோதெரபிஸ்ட் நங்கவள்ளி பாலாஜி,  தாதகாப்பட்டி ஜான்பீட்டர் என்பவரின் மனைவி அந்தோணி சகாயம் ஆகியோர் சிறுவனை கம்பால் அடித்த காட்சிகள் பதி வாகி இருந்தது. இந்த சம்பவத்தை தடுக்காமல் அழகா புரம் பாத்திமாநகரை சேர்ந்த பயிற்சியாளர் திருப்பதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.  இது குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.

கவியருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி

கோவை, ஜூலை 13- பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவிக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித் துள்ளது. கோவை, ஆழியாறு அணையை ஒட்டி, வனத் துறை கட்டுப்பாட்டில் கவி  அருவி உள்ளது. இந்நிலை யில், கடந்த ஆறு மாதங் களாக வெயிலின் தாக்கத் தினாலும், கடும் வறட்சியி னாலும் கவியருவி மூடப் பட்டிருந்தது. தொடர்ந்து, கடந்த வாரத்தில் தென் மேற்குப் பருவமழை காரண மாக கவியருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்து, தண்ணீர் சீராக வருவதால் கவியருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு புதனன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை: தோட்டப்பயிர்களை காக்க வழிகாட்டுதல்

திருப்பூர், ஜூலை 13 - தென்மேற்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து  தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது குறித்த ஆலோச னைகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பசுமைக் குடில் மற்றும் நிழல்வலைக் குடிலின் அடிப்பா கத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல் களை பத்திரமாக மூடி காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண் டும். மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இக் குடிலின் கட்டுமானத்திள் கிளிப்புகள் இருப்பின் அவற்றை மாற்ற வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை போன்ற பல் லாண்டு பயிர்களில் காய்ந்த, பட்டுப்போன கிளைகளை அகற்றி மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப்  பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். இளஞ்செ டிகள் காற்றினால் பாதிக்காதபடி தாங்கு குச்சிகள் கொண்டு  கட்ட வேண்டும்.வாழை பயிர்காற்றினால் பாதிப்பு ஏற்படும்  பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின்  அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூக லிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி, வாழைத் தார்களை முறையாக மூடி வைத்து, 75 சதவீதத்திற்கு மேல்  முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும். வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி  மற்றும் கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில்  பயிர் காப்பீடு செய்ய வேண்டும். வயல்களில் அதிக நீர்  தேங்காதபடி உரிய வடிகால் வசதி செய்வதுடன், நீர்பாசனம்  மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை  தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால்  முட்டுக்கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாமல்  பாதுகாக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர்ப்பாது காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலர்களை தொடர்புகொள்ளலாம். என மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

குடிநீர் குழாய் முதல் நாள் துண்டிப்பு, மறுநாள் இணைப்பு திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகத்தின் குளறுபடி

அவிநாசி, ஜூலை 13 - திருமுருகன் பூண்டி நகராட்சியில் முறைகேடான இணைப்பு என சொல்லி  முதல் நாள் துண்டித்த குடிநீர் குழாய் இணைப்பை மறுநாள் மீண்டும் இணைப்புக் கொடுத்தனர். நகராட்சி நிர் வாகத்தின் குளறுபடியைக் காட்டுவ தாக இந்த செயல்பாடு அமைந்துள் ளது. திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்பட்ட 19ஆவது வார்டில் நகராட்சி நிர்வாகத்தினர் முறைகேடான குடிநீர் இணைப்பு குறித்து திங்களன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிமுகவை சேர்ந்த முன்னாள் பேரூ ராட்சித் தலைவர் பழனிசாமி வீட்டில் குடிநீர் இணைப்பு முறைகேடாக கொடுக்கப்பட்டது என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தனர். நகராட்சி  தலைவர் குமார், நகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சம்பவ இடத்தில் இருந்து இணைப்பைத் துண்டித்தனர். ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறுநாள் 25க்கும் மேற்பட்ட திருநங்கையர் தங்கள் குடிநீர்  தேவைக்காக  முறையாக அமைக்கப் பட்ட பொதுக் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து விட்டதாகக் கூறி திருமுருகன்பூண்டி நகராட்சி அலு வலகத்தை செவ்வாயன்று முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் அவர்கள் நகராட்சி நிர்வா கத்திடம் அளித்த மனுவில், நாங்கள் 19 ஆவது வார்டு கானாக்காடு பகுதியில்  15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இங்கு போதுமான குடிநீர்  வசதி இல்லாததால், அன்றைய பேரூ ராட்சி செயல் அலுவலர் சம்பத்நாயுடு விடம், மனுக் கொடுத்து முறைப்படி குடி நீர் இணைப்பு கொடுத்தனர். ஆனால்  நகராட்சி நிர்வாகத்தினர், முறைகேடாக  அமைக்கப்பட்டதாக கூறி குடிநீர் இணைப்பை துண்டித்தது சரியல்ல. ஆகவே உடனடியாக துண்டித்த குடிநீர்  இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர்.  இதையடுத்து நகராட்சி நிர்வாகம் முதல் நாள் துண்டித்த குடிநீர் குழாய்  இணைப்பை ஆய்வு செய்து, அது  பொதுக் குடிநீர் குழாய் என்று உறுதிப்ப டுத்தி, மறு நாள் திருநங்கையர் வசிக் கும் பகுதியில் இணைப்பு வழங்கினர். நகராட்சி நிர்வாகம் ஒரு பணியைச்  செய்யும்போது முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க  வேண்டும். அதுவும் நகராட்சி ஆணைய ரும், தலைவரும் நேரில் சென்று ஆய்வு  செய்து முறைகேடான இணைப்பு என்று  துண்டித்ததுடன், அதைப் பற்றி ஊடகங் களுக்கும் தெரிவித்தனர். ஆனால் அது  பொதுக் குடிநீர் குழாய் இணைப்பாக இருந்திருப்பது கூட நகராட்சி நிர்வா கத்துக்குத் தெரியாதா? ஏன் இப்படி முன் னுக்குப் பின் முரணாக செயல்படுகின் றனர். இது நகராட்சி நிர்வாகத்தின் திற னான செயல்பாட்டுக்கு பொருத்தமான தாக இல்லை என்று திருநங்கையரும், அப்பகுதி மக்களும் முகச்சுளிப்புடன் கூறினர்.

கருக்கலைப்பு: துணை இயக்குநர் விளக்கம்

திருப்பூர், ஜூலை 13- மருத்துவர்களின் பரிந்து ரையில்லாமல் கருக்க லைப்பு மாத்திரை விற்பனை  செய்யும் மருந்துக்கடை களினால் கர்ப்பிணிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பான கருக்க லைப்பு முறைகள் குறித்து அரசு பயிற்சி அளித்துள்ளது. கருக்கலைப்பு மாத்திரைகள் பாதுகாப்பான முறையில் அனைத்து அரசு மருத்துவ மனைகளில் சட்டத்துக்கு உட் பட்டு இலவசமாக வழங்கப்ப டுகிறது என்று மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் மருத்து வர் கவுரி தெரிவித்துள்ளார்.

2 வாரங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை பேரூராட்சி அதிகாரியை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

ஈரோடு, ஜூலை 13- சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகு தியில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகிக் கப்படாததை கண்டித்து, பேரூராட்சி செயல் அதிகாரியை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூ ராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் காவிரி ஆற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சென் னிமலையை அடுத்த ஈங்கூர் ரயில்வே பாலம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரதான காவிரி ஆற்று குடிநீர் குழாய் உடைந்து விட்டது.  இதை சரி செய்யும் பணி நடைபெற்று வரு கிறது. 2 வாரமாகியும் உடைந்த குழாய் சரி  செய்யப்படாததால், சென்னிமலை பேரூ ராட்சி பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப் பட்டு வருகின்றனர். இதுகுறித்து சென்னி மலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெய ராமனிடம் வார்டு கவுன்சிலர்கள் முறையிட் டுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னிமலை பேரூராட்சி  வார்டுகளைச் சேர்ந்த 9 கவுன்சிலர்கள் புத னன்று இரவு பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கவுன்சிலர்கள் அனை வரும், கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோ கம் செய்யாததை கண்டித்து பேரூராட்சி செயல் அதிகாரியை முற்றுகையிட்டனர். மேலும் அவரிடம், “ஏன் இன்னும் உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்யாமல் இருக்கிறீர்கள்” என கவுன்சிலர் கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு, விரைவில் உடைந்த குழாய் சரி செய்யப் படும் என்றும், அதற்கு முன்பாக லாரிகள் மூலம் வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படும் என செயல் அதிகாரி ஜெயராமன் கூறுகையில் உறுதியளித்தார். அதன்பேரில் கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பணம் கேட்டு கொலை மிரட்டல்: பாஜக தலைவர் கைது

சேலம், ஜூலை 13- திரையரங்கு மேலாளரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சேலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் பிர பலமான திரையரங்கம் மற்றும் திரு மண மண்டபம், அதன் தொடர்பு டைய 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல கோடி ரூபாய் மதிப் புள்ள சொத்துக்கள் அனைத்தும்  இளையாழ்வார் என்பவருக்கு சொந் தமானது. இளையாழ்வர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த நிலை யில், அவரது மூத்த மகள் அம்பு ஜரம், அவரது உறவினர்கள் பெய ரில் உள்ளது. திரையரங்கு மேலா ளராக ஆத்தூரைச் சேர்ந்த அங்க முத்து உள்ளார். இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நரேஷ் குமார், கீதேசன் ஆகியோரிடம் சொத்து தொடர்பாக பவர் பத்தி ரம் வாங்கி உள்ளதாகவும், பவர்  பத்திரம் தன்னிடம் உள்ளதாகவும், திரையரங்கை தொடர்ந்து நீ நடத் தக்கூடாது என்றும், திருமண மண் டபம் அதன் தொடர்புடைய கடை கள் வாடகை அனைத்தையும் வசூல் செய்து தன்னிடம் தர வேண்டும் எனவும் திரையரங்கு மேலாளர் அங்க முத்துவை, பாஜக சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவரான அருள் என்ற அருள்பிரகாஷ் (50)  என்பவர் தொலைபேசியில் மிரட்டி யுள்ளார். இதுதொடர்பாக நரேஷ்குமா ரின் மனைவி கிருஷ்ணவேணியி டம் அங்கமுத்து கேட்டபோது, அவ ரும் அங்கமுத்துவை மிரட்டியுள் ளார். இதுகுறித்து அங்கமுத்து ஆத் தூர் நகர காவல் நிலையத்தில் புகா ரளித்தார். அதன்பேரில் ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருள்பிரகாசை கைது செய்தனர். மேலும், நரேஷ்குமார் மற்றும் அவ ரது மனைவி கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வரு கின்றனர். ஏற்கனவே, அருள் பிர காஷ் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் சேலம் மாவட்டத் தில் உள்ள பல்வேறு காவல் நிலை யங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மின்தடை

நாமக்கல், ஜூலை 13- ராசிபுரம் தாலுகா, மெட் டாலா துணை மின் நிலை யத்தில் வெள்ளியன்று (இன்று) மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெற உள் ளது. இதனால் வெள்ளி யன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிலிப்பா குட்டை, கணவாய்ப்பட்டி, கப் பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார் கூடல்பட்டி, மெட்டாலா, ஆயில்பட்டி, காட்டூர், மூலக் குறிச்சி, ஊனாந்தாங்கல் ஆகிய பகுதிகளில் மின் விநி யோகம் இருக்காது.

விமானத்தின் மீது பறவை மோதியது அவசரமாக விமானம் தரையிறங்கியது

கோவை, ஜூலை 13- கோவையில், விமானம் மீது பறவை மோதிய நிலையில், 160 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கியது. கோவை சர்வதேச விமான நிலையம்  பீளமேட்டில் அமைந் துள்ளது. இந்தியாவின் பதினைந்தாவது மிக பெரிய விமான நிலையம் இதுவாகும். இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான நிலைய பட்டியலில் முதல் தர பட்டியலில் உள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு விமான நிலையங்களைக் கொண்ட மாநகரங்கள் இரண்டு மட்டுமே. அவை சென்னை மற்றும் கோவை ஆகும். கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள் ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள் ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வரு கிறது. தினமும் சுமார் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினந் தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வியாழனன்று காலை 4 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த  விமானத்தில் 160க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விமா னம் வானத்தில் பறக்க தொடங்கிய சில நிமிடத்திலேயே விமா னத்தின் மீது  பறவை  மோதியது. இதையறிந்த விமானி உடனடி யாக விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர், விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார். இதைய டுத்து அங்கிருந்த பொறியாளர்கள் உடனடியாக சென்று ஆய்வு செய்தனர்.  ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ஒரு அரை மணி நேரத் திற்கு பின்னர் விமானம் இயக்கப்பட்டது. பறவை மோதியவு டன் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை: தோட்டப்பயிர்களை காக்க வழிகாட்டுதல்

திருப்பூர், ஜூலை 13 - தென்மேற்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து  தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது குறித்த ஆலோச னைகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பசுமைக் குடில் மற்றும் நிழல்வலைக் குடிலின் அடிப்பா கத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல் களை பத்திரமாக மூடி காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண் டும். மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இக் குடிலின் கட்டுமானத்திள் கிளிப்புகள் இருப்பின் அவற்றை மாற்ற வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை போன்ற பல் லாண்டு பயிர்களில் காய்ந்த, பட்டுப்போன கிளைகளை அகற்றி மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப்  பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். இளஞ்செ டிகள் காற்றினால் பாதிக்காதபடி தாங்கு குச்சிகள் கொண்டு  கட்ட வேண்டும்.வாழை பயிர்காற்றினால் பாதிப்பு ஏற்படும்  பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின்  அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூக லிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி, வாழைத் தார்களை முறையாக மூடி வைத்து, 75 சதவீதத்திற்கு மேல்  முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும். வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி  மற்றும் கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில்  பயிர் காப்பீடு செய்ய வேண்டும். வயல்களில் அதிக நீர்  தேங்காதபடி உரிய வடிகால் வசதி செய்வதுடன், நீர்பாசனம்  மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை  தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால்  முட்டுக்கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாமல்  பாதுகாக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர்ப்பாது காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலர்களை தொடர்புகொள்ளலாம். என மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

குடிநீர் குழாய் முதல் நாள் துண்டிப்பு, மறுநாள் இணைப்பு திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகத்தின் குளறுபடி

அவிநாசி, ஜூலை 13 - திருமுருகன் பூண்டி நகராட்சியில் முறைகேடான இணைப்பு என சொல்லி  முதல் நாள் துண்டித்த குடிநீர் குழாய் இணைப்பை மறுநாள் மீண்டும் இணைப்புக் கொடுத்தனர். நகராட்சி நிர் வாகத்தின் குளறுபடியைக் காட்டுவ தாக இந்த செயல்பாடு அமைந்துள் ளது. திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்பட்ட 19ஆவது வார்டில் நகராட்சி நிர்வாகத்தினர் முறைகேடான குடிநீர் இணைப்பு குறித்து திங்களன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிமுகவை சேர்ந்த முன்னாள் பேரூ ராட்சித் தலைவர் பழனிசாமி வீட்டில் குடிநீர் இணைப்பு முறைகேடாக கொடுக்கப்பட்டது என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தனர். நகராட்சி  தலைவர் குமார், நகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சம்பவ இடத்தில் இருந்து இணைப்பைத் துண்டித்தனர். ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறுநாள் 25க்கும் மேற்பட்ட திருநங்கையர் தங்கள் குடிநீர்  தேவைக்காக  முறையாக அமைக்கப் பட்ட பொதுக் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து விட்டதாகக் கூறி திருமுருகன்பூண்டி நகராட்சி அலு வலகத்தை செவ்வாயன்று முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள் நகராட்சி நிர்வா கத்திடம் அளித்த மனுவில், நாங்கள் 19 ஆவது வார்டு கானாக்காடு பகுதியில்  15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இங்கு போதுமான குடிநீர்  வசதி இல்லாததால், அன்றைய பேரூ ராட்சி செயல் அலுவலர் சம்பத்நாயுடு விடம், மனுக் கொடுத்து முறைப்படி குடி நீர் இணைப்பு கொடுத்தனர். ஆனால்  நகராட்சி நிர்வாகத்தினர், முறைகேடாக  அமைக்கப்பட்டதாக கூறி குடிநீர் இணைப்பை துண்டித்தது சரியல்ல. ஆகவே உடனடியாக துண்டித்த குடிநீர்  இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர்.  இதையடுத்து நகராட்சி நிர்வாகம் முதல் நாள் துண்டித்த குடிநீர் குழாய்  இணைப்பை ஆய்வு செய்து, அது  பொதுக் குடிநீர் குழாய் என்று உறுதிப்ப டுத்தி, மறு நாள் திருநங்கையர் வசிக் கும் பகுதியில் இணைப்பு வழங்கினர். நகராட்சி நிர்வாகம் ஒரு பணியைச்  செய்யும்போது முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க  வேண்டும். அதுவும் நகராட்சி ஆணைய ரும், தலைவரும் நேரில் சென்று ஆய்வு  செய்து முறைகேடான இணைப்பு என்று  துண்டித்ததுடன், அதைப் பற்றி ஊடகங் களுக்கும் தெரிவித்தனர். ஆனால் அது  பொதுக் குடிநீர் குழாய் இணைப்பாக இருந்திருப்பது கூட நகராட்சி நிர்வா கத்துக்குத் தெரியாதா? ஏன் இப்படி முன் னுக்குப் பின் முரணாக செயல்படுகின் றனர். இது நகராட்சி நிர்வாகத்தின் திற னான செயல்பாட்டுக்கு பொருத்தமான தாக இல்லை என்று திருநங்கையரும், அப்பகுதி மக்களும் முகச்சுளிப்புடன் கூறினர்.

கருக்கலைப்பு: துணை இயக்குநர் விளக்கம்

திருப்பூர், ஜூலை 13- மருத்துவர்களின் பரிந்து ரையில்லாமல் கருக்க லைப்பு மாத்திரை விற்பனை  செய்யும் மருந்துக்கடை களினால் கர்ப்பிணிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பான கருக்க லைப்பு முறைகள் குறித்து அரசு பயிற்சி அளித்துள்ளது. கருக்கலைப்பு மாத்திரைகள் பாதுகாப்பான முறையில் அனைத்து அரசு மருத்துவ மனைகளில் சட்டத்துக்கு உட் பட்டு இலவசமாக வழங்கப்ப டுகிறது என்று மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் மருத்து வர் கவுரி தெரிவித்துள்ளார்.