அவிநாசி, ஜன.12- ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்ட்டிடியூட், இந்தியக் கலாச்சார அமைச்சகம் சார்பில் 3 நாள் யோகா பயிற்சி முகாம் குன்னத்தூ ரில் நடைபெற்று வருகிறது. ஈரோடு மையப் பொறுப்பாளர் அருணாச்சலம், சங்ககிரி தொழிலதிபர்கள் தமிழரசு, வெங்கட், பொறுப்பாளர்கள் துரை சாமி, மணி(எ)பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் புதன்கி ழமை இரவு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊத்துக் குளி அரசு மருத்துவனை மருத்துவர் கார்த்திகேயன் வர வேற்று பேசினார். பேராசிரியர் சுமங்கலி, பிரைட்டர் மைண்ட் வகுப்பு மூலம் குழந்தைகளின் அறிவாற்றல் மேம்படுத்துதல் குறித்து பயிற்சியளித்தார். கரூர் யோகா பயிற்சியாளர் மருத் துவர் வர்ஷா யோகா பயன்கள் குறித்து விளக்கமளித்தனர். சனிக்கிழமை வரை நாள்தோறும் 6 மணி முதல் 8 மணி வரை இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பெரியவர்களின் உடல் நலத்துக்கான யோகா, மன நலனுக்கான தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதுவரை இந் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.