districts

img

200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை, மே 31- தமிழக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற மூன்று பேரை கைது செய்த  போலீசார், அவர்களிடமிருந்து 200 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்கு  உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகை யிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக,  சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போர்ட் ஹவுஸ் அருகே வாகன சோதனை செய்த  போலீசார், டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வாக னத்தில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கெலா ராம் (26), நாக ராம் (24) மற்றும் செட்டிபாளையம் பகுதியில்  சேர்ந்த மணிகண்ட பூபதி (39) ஆகியோர்களை கைது செய்த  போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1,57,000/- மதிப்பு உள்ள  200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த னர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.

;