districts

img

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

திருப்பூர், அக். 17- திருப்பூரில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை  வாங்கி கேரளாவுக்கு கடத்த முயன்ற  நபரை குடிமைப் பொருள் வழங்கல் குற் றப் புலனாய்வு காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 2100 கிலோ  ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட் டது. குடிமை பொருள் வழங்கல் குற்றப்பு லனாய்வு துறை இயக்குநர் ஆபாஷ்கு மார் உத்தரவின் பேரில், கோவை மண் டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி அறிவுரைபடி, ஈரோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில், திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வு துறை காவல் ஆய்வாளர் சாந்தி  மற்றும் சார்பு ஆய்வாளர்கள் இசக்கி,  கார்த்தி மற்றும் போலீசார், தீபாவளியை  முன்னிட்டு வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுவதை தடுப்பது குறித்து வாகன தணிக்கையில் ஈடுபட் டனர்.  

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு,   கஞ்சம்பாளையம் ரோடு ஸ்ரீராம் கிரீன் வேலி பள்ளி அருகில் ரேசன் பொருட் கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம் பந்தமாக வாகன தணிக்கை செய்த னர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த டி.என். 07 ஏ.டி. 4658   ஆம்னி வேனை, சந்தேகத்தின் அடிப்ப டையில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி வாக னத்தில் வந்த நபரை விசாரணை செய்த தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி பெரியாளுரைச் சேர்ந்த சு.ஆறு முகம் (43) என்பதும், இவர் தற்போது திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியில் தங்கி யிருப்பதும் தெரியவந்தது. தமிழ்நாடு தேவர் பேரவையின் திருப்பூர் மாவட்ட  தலைவர் ஆக உள்ளார். ரேசன் அரி சியை அப்பகுதி பொது மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரளா மாநில கள்ள சந்தையில் விற்பனை செய்ய சுமார் 2100 கிலோ ரேசன் அரி சியை மாருதி ஆம்னியில் கடத்தி சென் றது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை ரேசன் அரிசி கடத் திய குற்றத்திற்கு கைது செய்ததுடன், அவரிடமிருந்து ரேசன் அரிசி 2100 கிலோவை கைப்பற்றினர். தொடர்ந்து அவரிடம் திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையி னர் விசாரணை செய்து வருகின்றனர்.

;