districts

img

மகாகவியின் 101 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

சேலம், செப்.11- மகாகவி பாரதியாரின் 101 ஆவது நினைவு தினம் ஞாயிறன்று அனு சரிக்கப்பட்டது. மகாகவி பாரதியாரின் 101 நினைவு தினமான ஞாயிறன்று, அவரின் நினைவுகளை போற்றும் வகையில் சேலத்திலுள்ள மகாகவியின் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தின் சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது. சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர்  வசந்தி, மாவட்ட செயலா ளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ஆகியோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். தமுஎகச சேலம் மாவட்ட முன்னோடியும், இலக்கிய ஆய்வறிஞருமான இலா.வின் சென்ட், தமுஎகச-வின் பிரதான முழக் கமான “தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை” குறித்து உரையாற்றினார். மேட்டூர் மாங்குயில் இசைக்குழு சார்பாக  மேட்டூர் வசந்தி பாரதியார் பாடல் களை பாடினார். இந்நிகழ்சியில் மாவட்ட நிர்வாகிகள் சா.சோபனா, ஜெயக்குமார், கீர்த்திகா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

வாலிபர் சங்கத்தினர் அனுசரிப்பு

சேலம் வடக்கு மாநகர வாலிபர் சங்கம் சார்பில் பாரதி சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இதில், மாநகர தலைவர்  கே.ராமச்சந்திரன், மாநகர செயலா ளர் ஆர்.குருபிரசன்னா, மாநகர பொரு ளாளர் டி.மனோகரன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பவித்ரன், வாலி பர் சங்க முன்ளாள் மாவட்ட செயலா ளர் என்.பிரவீன்குமார், மாநகரக் குழு உறுப்பினர்கள் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.