வியாழன், பிப்ரவரி 25, 2021

districts

img

10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தஞ்சாவூர், ஜன.17- தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகிலுள்ள கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார்திடல் உள்பட 32 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களி லும் சுமார் 4500 நாட்டுப் படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 134 விசைப்படகுக ளும் உள்ளன. இதில் சுமார் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீன வர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு  மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் மீனவ கிராமங்களில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

;