districts

img

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓசூர், அக். 14- அரசு போக்குவரத்துக் கழகம் ஓசூர் பணிமனையில் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான பணி நேரம், ஊதியம், விடுப்பு வழங்குவதும் மறுக்கப்படுவதைக் கண்டித்து அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம் பணிமனை முன்பு நடைபெற்றது. அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் மலைப்பிரதேசப் படி 6,000 வழங்க வேண்டும், மிகக் குறைந்த பணியாளர்களே உள்ளதால் தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும், ஓட்டுநர் நடத்துனர்களை தொடர்ந்து இரண்டு நாட்களாக மூன்று நாள் பணி செய்ய நிர்பந்திப்பதை கைவிட வேண்டும், பெண் பணியாளர்களுக்கு தனியாக கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலாளர் நாகராஜ், மண்டலத் தலைவர் சண்முகம், மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் பி.ஜி.மூர்த்தி, சங்க நிர்வாகிகள் கோவிந்தன், குமார், பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

;