districts

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் அதிருப்தி

கிருஷ்ணகிரி, ஜூன் 6- நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்ட ணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1,228 சுங்கச்சாவடி கள் உள்ளன.சுங்கக் கட்டணம் ஆண்டுக்கு 2 முறை தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது.

முதன்மை சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் மாதமும்,மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.  கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.

தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டண மும், ஒரே நாளில் திரும்பி வருவதற் கான கட்டணமும் 5 முதல் ரூ.20 வரை யிலும்,மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் 100 முதல் 400 வரையிலும் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 65 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

குறிப்பாக இவற்றில் 32 சுங்கச்சாவடிகள் ஏற்கெனவே காலாவதி ஆகிவிட்டாலும் இன்னும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த 32 சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி பலமுறை ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இதுகுறித்து செவிசாய்க்கா மல்  32 சுங்க சாவடிகளை அகற்றாமல் நிராகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியிலும் தற்போது கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள், லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

;