districts

img

சிஐடியு புதிய கிளை துவக்க விழா

ஓசூர் பெரியார் நகர் அருகே ஏபிஜே அப்துல்கலாம் டெம்போ ஸ்டேண்டு (சிஐடியு) புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் சங்கக் கொடியை ஏற்றினார். மாவட்டத் தலைவர் வாசுதேவன் வாழ்த்திப் பேசினார். பொருளாளர் ஸ்ரீதரன், கட்டுமான சங்கத்தின் செயலாளர் சீனிவாசன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் குரு, ஸ்டாண்ட் தலைவர் கார்மேகம், நிர்வாகிகள் லூகாஸ், ராயப்பன், செல்வம், மகாலிங்கம், மூர்த்தி, அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.