districts

img

விவசாய விளை நிலங்களை சிப்காட் அமைக்க எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி, அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்கலம் ஊராட்சி பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்களை சிப்காட் அமைக்க எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி பறக்க விட்டனர். தொடர்ந்து 17ஆவது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே ஞாயிறன்று (ஜன. 22)  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.