கிருஷ்ணகிரி,அக்.11- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிர் செய்து வருகின்றனர். இந்த தென்னை மரத்தில் கிடைக்கும் தேங்காய்கள், ஓலை, தென்னை மட்டை, தேங்காய் மட்டை உள்ளிட்டவைளைக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வரு கின்றனர். இந்நிலையில் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொள்முதல் விவசாயிகள் இருந்து வரு கின்றனர். இவர்கள் அருகில் உள்ள உள்ள தென்னை மரங்களை குத்தகை பெற்று அந்த குத்தகையின் மூலம் தேங்காய் வெட்டி அதனை மொத்தமாக கொண்டு வந்து தேங்காய் மண்டியில் உரித்து தேங்காய்களை ரகம் பிரித்து அதனை மும்பை, கொல்கத்தா, நாகலாந்து, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்வது வழக்கம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் 26 ஆயி ரத்து 500 ரூபாய்க்கு விலை போன நிலையில் தற்பொழுது 23 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விலை போவதாகவும், இதனால் ஒவ்வொரு விவசாயிகளிடமும் சுமார் 500 முதல் 1000 டன் தேங்காய்கள் தற்பொழுது தேக்கமாக உள்ளதாகவும், மேலும் இந்த பகுதியில் மட்டும் சுமார் 10,000 டன் தேங்காய்கள் தேக்கத்தில் இருப்ப தால் விவசாயிகள் மற்றும் தென்னை வியாபாரிகள் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் தற்பொழுது தென்னை மரங்களில் இலை கருகல் நோய் தாக்குதலால் போதிய தென்னை விளைச்சல் இல்லாமல் தற்பொழுது குத்தகைதாரர்களும் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.