districts

img

மாணவி ஸ்ரீமதி வழக்கு மே 28-க்கு ஒத்திவைப்பு! நீதிமன்ற வளாகத்தில் கதறித் துடித்த தாயார் செல்வி

கள்ளக்குறிச்சி, மே 14- கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்குத் தொடர்  பான மறு விசாரணை மே 28-ஆம்  தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள் ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியாருக்குச் சொந்தமான சக்தி  மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி-யின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரு கிறது. 

கடந்த ஏப்ரல் 30 அன்று நடை பெற்ற வழக்கு விசாரணையின் போது, மாணவி தரப்பில், கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனை கண்  காணிப்பு கேமிரா பதிவு, மாணவி யின் செல்போன் உரையாடல், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டன. மேலும், வழக்கில் இருந்து விடு விக்கப்பட்ட ஆசிரியர்களை மீண் டும் சேர்க்க வலியுறுத்தி மாணவி தரப்பில் வக்காலத்து தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதி இந்த வழக்கை மே 14-ஆம்  தேதிக்கு ஒத்தி வைத்தார். 

அதன்படி செவ்வாயன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி தரப்பி லிருந்து தாளாளர், பள்ளிச் செயலா ளர், பள்ளி முதல்வர் ஆகியோர் ஆஜராகினர். அப்போது அவர் களைக் கண்டதும் நீதிமன்ற வளா கத்தில் இருந்த மாணவி ஸ்ரீமதி யின் தாய் செல்வி, தனது மகளின் மர ணத்திற்கு காரணமான இவர்களை  எதிர்த்து தன்னால் போராட முடிய வில்லையே.. என்ற ஆற்றாமை யுடன் அழுது புலம்பியதுடன், மார்  பில் அடித்துக் கொண்டு கதறினார்.  இது காண்போரைக் கண்கலங்கச் செய்வதாக இருந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை அமை திப்படுத்தினர். 

தொடர்ந்து மாணவி தரப் பில் ஆஜரான வழக்கறிஞர் ப.பா. மோகன், கடந்த விசாரணை யின்போது கோரியபடி கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமிரா பதிவு, மாணவியின் செல்போன் உரை யாடல், முதல் தகவல் அறிக்கை  உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் தேவசந்திரன், கால  அவகாசம் கோரியதைத் தொட ர்ந்து வழக்கை மே 28-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்த ரவிட்டார்.

;