இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெறுவதையொட்டி தியாகி அரசூர் சேட்டு நினைவு ஜோதி பயணம் அரசூர் நான்கு முனை சந்திப்பில் இருந்து புறப்பட்டது. முன்னாள் மாநில துணை தலைவர் ஜி. ஆனந்தன் எடுத்து கொடுக்க மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் பெற்றுக் கொண்டார்.மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், திருவெண்ணைநல்லூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ரஞ்சித், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், செயலாளர் ஆர்.மூர்த்தி, சிபிஎம் வட்ட செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.