கள்ளக்குறிச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் பகலவன் வீரர்களின் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவகர், விஜய கார்த்திக்ராஜா, காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.