நாகர்கோவில், ஜன.16- கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூ ராட்சியில் சமத்துவ பொங்கல்- விழா நடை பெற்றது. நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் ஆர்.ஜெயராஜ், செயல் அலுவலர் சசிகுமார், வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மஞ்சாலுமூடு ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் ஊராட்சித் தலைவர் தீபா தலை மையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் பேபி, ஊராட்சி செயலர் செல்வின்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, ஊராட்சி துணைத் தலைவர் சசிகுமார், பால்ராஜ் மற்றும் மாணவ-மாணவிகள், தூய்மைக் காவலர்கள், சுய உதவி குழுக் களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.