districts

img

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக படுதோல்வி; இந்தியா கூட்டணி வெற்றி விஜய் வசந்த் 1,78,408 கூடுதல் வாக்குகள் பெற்றார்

நாகர்கோவில், ஜுன் 4- குமரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் ஏப்.19ல் நடந்தது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளராக விஜய் வசந்த், அதிமுக சார்பில் பசிலியான் நசரேத், பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் மரிய ஜெனிபர் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் விஜய் வசந்த் சுமார் 1,78,408 கூடுதல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

பதிவான வாக்குகள் ஜுன் 4 செவ்வா யன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை பெற்று வந்தார். இறுதியாக விஜய் வசந்த் 5 லட்சத்து 38 ஆயிரத்து 611 வாக்குகளு டன் வெற்றி பெற்றார். பொன். ராதா கிருஷ்ணன் 3 லட்சத்து 60 ஆயிரத்து 203  வாக்குகளும், மரிய ஜெனிபர் 51 ஆயிரத்து 725 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர். 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகு திக்கான தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியா  கூட்டணியின் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் ஆகியோருக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழுத் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

;