கடலூர், செப்.23- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கதின் 16 ஆவது மாநில மாநாடு கட லூரில் செப்டம்பர் 29,30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி மாதர் சங்கம், சிஐடியு சார்பில் “உழைக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், சவால்களும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் நெய்வேலி எட்டு ரோடு சந்திப்பில் நடை பெற்றது. மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மாதவி தலைமை தாங்கி னார். மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாவட்டத் தலை வர் பி.கருப்பையன். நெய்வேலி சங்கத்தின் தலைவர் டி.ஜெயராமன், பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, காண்ட்ராக்ட் சங்க பொதுச் செயலாளர் டி.அமிர்தலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் எ.வேல்முருகன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் வி.மல்லிகா, நகரச் செய லாளர் என்.தனலட்சுமி ஆகியோர் பேசினார். இதில் நிர்வாகிகள் ஏ.ராணி, எஸ்.வில்லியம்ஸ் பழனிச்சாமி, எம்.அன்பழகன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். நகரப் பொருளாளர் செல்வி நன்றி கூறினார்.