districts

img

மின்சாரம் தாக்கி தந்தை - மகன் சாவு

கடலூர், அக்.10- கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த சிறுபாக் கத்தில் கொடிக்கம்பியில் துணி உலர வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுப்பாக்கம் கிராமத்தில் ஆறுமகன் மகன் ராமன் (55) மனைவி பெரியம்மா (50) மற்றும்  மகன் மணிகண்டன் (30) ஆகியோர் குடும் பத்தினருடன் வசித்து வந்த னர். ஞாயிற்றுக்கிழமை (அக்.9) இரவு மழை பெய்து  கொண்டிருந்த போது தங்க ளது வீட்டின் மேல் பகுதி யில் காய வைத்திருந்த துணியை எடுக்கச் சென்ற  பெரியம்மா, கொடிக்கம்பி யிலிருந்த துணியை எடுக்க  முயன்றபோது, மின்கசி வினால் காயமடைந் துள்ளார். மனைவியை காப்பற்ற சென்ற ராமர் மீது மின்சாரம் தாக்கியதால் சத்தம் போட்டுள்ளார். அவ ரது அலறல் சத்தம் கேட்டு  காப்பாற்ற சென்ற மகன் மணி கண்டனையும் மின்சாரம் தாக்கியது.  இவர்களின் அலறல்  சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த வர்கள் வந்து மின்சாரத் தைக் துண்டித்து இருவரை யும் மீட்டு வேப்பூர் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதை யடுத்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், வேப்பூர் வட்டம் சித்தேரி யைச் சேர்ந்த விவசாயி வெ.பெரியசாமி (68),  இயற்கை உபாதை கழிப் பதற்காக திங்களன்று (அக்.10) வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மித்துள்ளார். அப்போது, தாக்குதலுக்குள்ளான அவர்  பலியானார். இதுகுறித்து தகவ லறிந்த வேப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து சடலத்தை கைப் பற்றி  விருதாசலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

;